முதலீட்டுக்கு ஈக்விட்டி ஃபண்டின் சரியான வகையை எப்படித் தேர்வுசெய்வது?

முதலீட்டு செய்வதற்கு சரியான ஈக்விட்டி வகை ஃபண்டை ஒருவர் எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவிற்கு ஒரு ஈக்விட்டி ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது என்பது, ஆடையைத் தேர்ந்தெடுப்பது போன்றது தான், ஆனாலும் முடிவெடுப்பது என்பது இன்னும் சிக்கலான செயல்முறையாகும். ஒரு சட்டை அல்லது ஆடையில் நீங்கள் துல்லியமாக எப்படிக் காட்சியளிப்பீர்கள், அது எந்த அளவுக்கு உங்களுக்குக் கச்சிதமாக இருக்கும், சௌகரியமாக இருக்கும், எந்த நிகழ்விற்காக வாங்குகிறீர்களோ அந்த நிகழ்விற்கு அது தகுந்ததாக இருக்குமா, என்றெல்லாம் யோசிப்பீர்கள் அல்லவா, அதே போன்ற அணுகுமுறை தான் உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வுசெய்யும்போதும் தேவை என்று கூறலாம்.

ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு செய்வதற்கு முன்பு, உங்கள் தற்போதைய முதலீட்டு போர்ட்ஃபோலியோவை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும். உங்கள் வார்ட்ரோபில் என்னென்ன வகை ஆடைகள் இருக்கின்றன, எவை இல்லை என்றெல்லாம் யோசிப்பீர்கள் அல்லவா, அதேபோல்தான் உங்களிடம் ஏற்கனவே என்னென்ன வகை முதலீடுகள் உள்ளன என்று பார்க்க வேண்டும்? உங்களிடம் ஏற்கனவே ஈக்விட்டி ஃபண்ட் முதலீடுகள் இருக்கலாம் அல்லது ஈக்விட்டி வடிவத்தில் உங்களிடம் சொத்து எதுவுமே இல்லாமலும் இருக்கலாம். ஆகவே, நீங்கள் தேர்வு செய்யும் அடுத்த ஈக்விட்டி ஃபண்ட் உங்கள் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவில் விடுபட்டவற்றை நிரப்பும் வகையில் இருக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஏற்கனவே டைவர்சிபைடு ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்திருந்தால், உங்கள் ரிஸ்க் விருப்பம் மற்றும் முதலீட்டு இலக்கு ஆகியவற்றுக்குப் பொருந்துகின்ற, மல்டி கேப் அல்லது மிட் கேப் ஃபண்ட் போன்ற ஈக்விட்டி ஃபண்டின் வகை வேறொன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.  வரியைக் குறைப்பதன் மூலம் சேமிப்பது உங்கள் இலக்காக இருந்து, அத்தகைய ஃபண்ட் உங்கள் போர்ட்ஃபோலியோவில் இல்லாமல் இருந்தால், வரிச் சேமிப்பளிக்கும் ஃபண்டைத் தேர்வுசெய்யலாம். பல வகையான ஃபண்ட்களில் டைவர்சிஃபிகேஷன் செய்வதன் மூலம் ஈக்விட்டி அசெட் வகை ரிஸ்க்கை நீங்கள் பரவலாக்க வேண்டும்.

முதலீட்டு இலக்கு, போர்ட்ஃபோலியோவின் ஸ்டாக் ஹோல்டிங், ஃபண்ட் மேனேஜர்கள், விண்ட்டேஜ், ரிஸ்க் காரணிகள், செலவின விகிதம் போன்றவற்றைப் பார்க்க வேண்டியது அடுத்த படியாகும். இது நீங்கள் வாங்க விரும்பும் ஆடையின் பாணி, நிறம், துணியின் தரம், நேர்த்தி போன்றவற்றைப் பார்ப்பது போன்றது. அதன்பிறகு, ஆடை உங்களுக்குப் பொருத்தமாக இருப்பதைப் போல, அவற்றின் சிறு சிறு நுட்பமான அம்சங்களும் உங்களுக்கு ஏற்றதுபோல் இருக்கிறதா என்று பார்ப்பீர்கள். ஃபண்டானது உங்கள் தேவை அல்லது உங்கள் மனதில் உள்ள இலக்குக்கு ஏற்றதாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நிலையில், அந்த ஃபண்டின் பெஞ்ச்மார்க்குடன் ஒப்பிடுகையில் அதன் பெர்ஃபார்மன்ஸ் டிராக் ரெக்கார்டை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

அடுத்த முறை நீங்கள் ஒரு ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினால், மேலே உள்ள தேர்ந்தெடுக்கும் அணுகுமுறையை முறையாகப் பின்பற்றுங்கள் அல்லது உதவிக்கு நிதி நிபுணரை அணுகிடுங்கள்.

345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்