மல்டி கேப் ஃபண்டுகள் என்பவை யாவை?

மல்டி கேப் ஃபண்ட்கள் என்பவை யாவை?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்கள் பற்றிய தகவல்களை ஆராயும்போது, எப்போதாவது XYZ மல்டி கேப் ஃபண்ட் என்பது போன்ற பெயர்களை கவனித்து, பிரபலமான லார்ஜ் கேப் ஃபண்ட்களில் இருந்து இவை எப்படி வேறுபடுகின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? பெயரில் உள்ளது போலவே, மல்டி கேப் ஃபண்ட் லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்பவை. இதன் மூலம் தனது போர்ட்ஃபோலியோவில் மார்க்கெட் கேப்கள் பலவற்றில் முதலீடு செய்து டைவர்சிஃபிகேஷனை வழங்குகின்றன.

அக்டோபர் 2017-இல் வெளியிடப்பட்டு ஜூன் 2018-இல் அமலுக்கு வந்த SEBI-இன் தயாரிப்பு வகைப்படுத்தல் சுற்றறிக்கையின்படி, ஈக்விட்டி ஃபண்ட்களை அவை போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்கும் ஸ்டாக்குகளின் வகைகளின் அடிப்படையில் லார்ஜ் கேப்ஸ், மிட் கேப்ஸ், ஸ்மால் கேப்ஸ் என மூன்றாக வகைப்படுத்தலாம். இந்தியாவின் பல்வேறு எக்ஸ்சேஞ்களில் பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. லார்ஜ் கேப் என்பது, இந்தியாவில் முழு மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் = பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் எண்ணிக்கை * ஒரு பங்கின் விலை) பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள முதன்மையான 100 நிறுவனங்களையே குறிக்கிறது. மிட் கேப் என்பது, முழு மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் 101வது முதல் 250வது வரையுள்ள நிறுவனங்களைக் குறிக்கிறது, முழு மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் 251வது மற்றும் அதற்கு அடுத்துள்ள நிறுவனங்கள் ஸ்மால் கேப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. 

லார்ஜ் கேப் ஃபண்ட்கள் கணிக்கக்கூடிய மற்றும் நிலைத்தன்மை கொண்ட வளர்ச்சி சாத்தியத்தைக் கொண்டிருக்கும் லார்ஜ் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. ஸ்மால் கேப் ஃபண்ட்கள், தற்போது அதிக வளர்ச்சி சாத்தியத்தைக் கொண்டிருக்கின்ற, ஆனால் அதே அளவு ரிஸ்க்கையும் கொண்டுள்ள ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும். லார்ஜ் கேப் ஃபண்ட்கள் குறைவான, ஆனால் நிலையான ரிட்டர்ன்ஸ் அளிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளவை. ஸ்மால் கேப் ஃபண்ட்கள் குறைந்த கால அளவிலும் மிகுந்த ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கலாம். மிட் கேப் ஃபண்ட், அதிக வளர்ச்சி சாத்தியம் கொண்ட, ஆனால் குறிப்பிடத்தக்க அளவு மற்றும் நிலைத்தன்மையை அடைந்துவிட்டதன் காரணமாக, ஸ்மால் கேப் நிறுவனங்களுடன் தொடர்புடைய ரிஸ்க் கொண்டிருக்காத மிட் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும். மிட் கேப் ஃபண்ட்கள், ஸ்மால் கேப் ஃபண்ட்களைப் போல் அதிக ரிஸ்க்கானவையாக இல்லாமல், லார்ஜ் கேப்களைவிய அதிக ரிட்டர்ன்ஸைக் கொடுக்கலாம். ஆனால், இவற்றிலும் லார்ஜ் கேப் ஃபண்ட்களைவிட அதிக ரிஸ்க் கொண்ட அம்சங்கள் சில உள்ளன.

மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்ட் வகை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய, பல்வேறு மார்க்கெட் கேப் பிரிவுகளில் அசெட்டை ஒதுக்கீடு செய்வது குறித்து SEBI தெளிவான வழிகாட்டுதல்களை (செம்படம்பர் 11, 2020 ஆண்டு) வழங்கியுள்ளது. மல்டி கேப் ஃபண்ட்கள் எந்த ஒரு நேரத்திலும், தனது அசெட்டுகளில் குறைந்தபட்சம் 75%-ஐ ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான இன்ஸ்ட்ருமென்ட்களில் முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும். போர்ட்ஃபோலியோவானது, அசெட்டுகளில் குறைந்தது 25%-ஐ லார்ஜ் கேப் ஸ்டாக்குகளிலும் 25%-ஐ மிட் கேப் ஸ்டாக்குகளிலும், 25%-ஐ ஸ்மால் கேப் ஸ்டாக்குகளிலும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மல்டி கேப் குரோத் ஃபண்ட் என்பது டைவர்சிஃபிகேஷனுக்கும் நீண்ட கால செல்வா வளர்ச்சிக்கும் நல்ல தெரிவாகும். அதே சமயம் இதன் 50% அசெட்டுகள் குறுகிய கால அளவில் ஸ்மால் மற்றும் மிட் கேப் ஸ்டாக்குகளில் இருக்கும் வாய்ப்பு இருப்பதால், குறுகிய கால அளவில் பார்க்கும்போது இது மிகவும் ரிஸ்க்கானதாகவும் இருக்கலாம். மார்க்கெட் கேப் எக்ஸ்போஷரின் உயர் வரம்பானது, ஃபண்ட் மேனேஜர்  மார்க்கெட் பற்றிய தனது கணிப்பின் அடிப்படையில் பல்வேறு மார்க்கெட் கேப் ஸ்டாக்குகளில் ஒதுக்கீட்டை சௌகரியமாக மாற்றவும் முடியாமல் போகும்.

முதலீட்டாளர்கள் மல்டி கேப் ஃபண்டை தனது போர்ட்ஃபோலியோவில் சேர்க்கும் முன்பாக, தன்னிடம் ஏற்கனவே உள்ள மியூச்சுவல் ஃபண்டின் முதலீடுகளையும், பல்வேறு மார்க்கெட் கேப் பிரிவுகளில் தற்போதைய எக்ஸ்போஷரையும் கவனமாகக் கணக்கீடு செய்ய வேண்டும். 5-7 வருடங்களுக்கும் குறைவான முதலீட்டுக் கால வரம்பு அல்லது குறைந்த ரிஸ்க் தாங்கும் திறன் கொண்டிருப்பவர்களுக்கு மல்டி கேப் ஃபண்ட்கள் பொருத்தமற்றவை.
 

345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்