ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துக்கும் ஒரு முதலீட்டு நோக்கம் இருக்கும் மற்றும் அது ஒரு நியக்கப்பட்ட ஃபண்ட் மேனேஜரின் மூலம் நிர்வகிக்கப்படும்.
நிதி மேலாண்மைக் குழுவால் எடுக்கப்படும் முடிவுகளின் மூலமும், ஈக்விட்டி அல்லது கடன் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மூலமும் இதன் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. வழக்கமாக, எல்லா நிதி மேலாண்மைக் குழுவிலும் போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகளின் தேர்வைச் செய்வதற்கான ஒரு செயல்முறை இருக்கும். மேலும், மாறுபடும் சந்தைச் சூழல்களில் இந்த செக்யூரிட்டிகளின் செயல்திறன்தான் திட்டத்தின் செயல்திறனை நிர்ணயிக்கும்.
விலை, தரம், அபாயம், நிதிநிலைமைகள், நிலவும் செய்திகள் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சரியான முடிவுகளை எடுப்பதற்குச் சிறந்த முயற்சிகளை நிதி மேலாண்மைக் குழு செய்திடும். சிறப்பான திறன்களையும், வலுவான செயல்முறையையும் மற்றும் தொடர்புடைய அனுபவத்தையும் கொண்டிருக்கும் ஒரு குழு, சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திடும்.
எனினும், நிஜமான நேர எல்லைகளுக்கு எதிராக செயல்திறனை அளவிட வேண்டியது முக்கியமானது - ஈக்விட்டி ஃபண்ட்களுக்கான நீண்ட காலகட்டம், ஹைபிரிட் ஃபண்ட்களுக்கான நடுத்தர காலகட்டம் அல்லது லிக்விட் ஃபண்ட்களுக்கான மிகவும் குறுகிய காலகட்டம்.