இலக்கு (கோல்) SIP கால்குலேட்டர்
உங்கள் இலக்கை அடையத் தேவையான மாதாந்திர SIP முதலீட்டைக் கண்டறியுங்கள்.
மாதாந்திர SIP தொகை₹0
உங்கள் மொத்த முதலீடு₹0
மாதாந்திர SIP தொகை₹0
உங்கள் மொத்த முதலீடு₹0
பொறுப்புதுறப்பு
- கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம், அது எதிர்கால ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் கிடையாது.
- இந்தக் கால்குலேட்டர்கள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, இவை உண்மையான ரிட்டர்ன்களைக் குறிப்பிடவில்லை.
- மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒரு நிலையான ரிட்டர்ன் விகிதம் கொண்டவை அல்ல, மேலும் ரிட்டர்ன் விகிதத்தைக் கணிப்பது முடியாது.
- பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.
பிற கால்குலேட்டர்கள்

உங்கள் மாதாந்திர SIP முதலீட்டின் எதிர்கால மதிப்பைக் கணக்கிடுங்கள்.

உங்கள் தற்போதைய முதலீடுகளைக் கருத்தில் கொண்டு, தேவையான SIP அல்லது லம்ப்சம் தொகையைக் கணக்கிடுவதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளைத் திட்டமிடுங்கள்.

உங்கள் தற்போதைய செலவினங்கள் மற்றும் எதிர்கால இலக்குகளின் மீது பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கணக்கிடுங்கள்.

முதலீட்டைத் தாமதிக்கப் போகிறீர்களா? உங்கள் செல்வப் பெருக்கத்தில் அந்தத் தாமதம் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இலக்கு SIP பற்றி மேலும் அறிக
கால்குலேட்டர்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள்




பெரும்பாலான முதலீட்டாளர்கள், தங்களது முதலீட்டுப் பயணத்தைத் தொடங்கும் முன்பு, குறிப்பிட்ட ஒரு கால வரம்புக்குள் குறிப்பிட்ட அளவு செல்வத்தைப் பெருக்கிவிட வேண்டும் என்று இலக்கை வைத்துள்ளனர். மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு SIP தொகையை முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஒரு முதலீட்டாளர் முடிவு செய்ய முடியும்.
இந்த SIP முதலீட்டு பகுப்பாய்விற்கு - முதலீட்டாளர்கள் இலக்கு (கோல்) அடிப்படையிலான SIP கால்குலேட்டரை தடையின்றிப் பயன்படுத்தலாம்
இலக்கு (கோல்) அடிப்படையிலான எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் என்பது என்ன?
இலக்கு (கோல்) அடிப்படையிலான எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் என்பது மெச்சூரிட்டி மதிப்பு (செல்வம் சேர்க்கும் இலக்கு) பற்றி ஒரு தெளிவைப் பெற உதவுகின்ற, பயன்படுத்த எளிதான ஆன்லைன் மென்பொருள் அல்லது கருவியாகும். நீங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பே இந்தக் கருவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தக் கருவி இலக்கு வைத்துள்ள கார்ப்பஸ் தொகை, முதலீட்டுக் கால அளவு, ரிட்டர்ன் விகிதம் போன்ற நீங்கள் வழங்கும் மதிப்புகளை வைத்து, முன்பே புரோகிராம் செய்யப்பட்ட அல்காரிதத்தைக் கொண்டு வேலை செய்கிறது. இருந்தாலும் எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் வழங்குவது, நீங்கள் வழங்கும் மதிப்புகளின் அடிப்படையில் உங்கள் கற்பனை முதலீட்டின் எதிர்கால மதிப்பின் மதிப்பீடுதான், மியூச்சுவல் ஃபண்டுகள் மார்க்கெட் ரிஸ்க்குகள் கொண்டவை என்பதால், இந்த மதிப்பீடுகளுக்கு உத்தரவாதம் கிடையாது. ஆகவே இதை எதிர்கால மதிப்பு கால்குலேட்டர் என்றும் அழைக்கிறோம்.
இலக்கு (கோல்) அடிப்படையிலான எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது?
எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் பயன்படுத்த எளிதானது, நீங்கள் வழங்கும் தரவுகளை வைத்து உங்களுக்கு SIP மதிப்பை அது வழங்குகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி நீங்கள் இலக்கு அடிப்படையிலான SIP கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம்:
படி 1: உங்கள் SIP முதலீட்டின் மூலம் நீங்கள் அடைய விரும்புகிற இலக்குத் தொகையை வழங்கவும்.
படி 2: முதலீட்டுக் கால அளவைத் தேர்வுசெய்யுங்கள்.
படி 3: எதிர்பார்க்கும் வருடாந்திர ரிட்டர்ன் விகிதத்தை (%) வழங்கவும்.
உங்களுக்கான மொத்த முதலீட்டுத் தொகையையும், ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய SIP தொகையையும் கால்குலேட்டர் காட்டும்.
மாதாந்திர SIP தொகையையும் முதலீட்டுக் கால அளவையும் முடிவு செய்வது உங்கள் இலக்கை அடைவதற்கு மிக முக்கியமாகும். இதைத் தெரிந்துகொள்ள இந்த கால்குலேட்டர் உங்களுக்கு உதவுகிறது.
இலக்கு (கோல்) அடிப்படையிலான SIP கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் அனுகூலங்கள்
இலக்கு (கோல்) அடிப்படையிலான SIP கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் பலன்கள் பின்வருமாறு:
1. இது எதிர்கால மதிப்பு கால்குலேட்டர்: இலக்கு அடிப்படையிலான இந்த எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் உங்கள் முதலீட்டின் எதிர்கால மதிப்பைக் கஊருகிறது, இன்னும் சிஸ்டமேட்டிக்கான முறையில் தொடர்ந்து முதலீடு செய்ய இது உங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.
2. நீங்களே கணக்கீடு செய்வதன் நேரம் மிச்சமாகிறது: குறிப்பிட்ட ஒரு மெச்சூரிட்டி தொகையை அடைய ஒவ்வொரு மாதமும் SIP முறைகளில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்களே கணக்கிட்டால் அதிக நேரம் எடுக்கும். அதற்கு இந்த கால்குலேட்டர் சட்டெனத் தீர்வைத் தருகிறது.
3. மனிதப் பிழை தவிர்க்கப்படுகிறது: நாமே கணக்கிடும்போது பிழைகள் ஏற்படுவது இயல்பு, இலக்கு அடிப்படையிலான SIP கால்குலேட்டரைப் பயன்படுத்துவதால் இதைத் தவிர்க்க முடியும்.
4. ஒரு முதலீட்டுத் திட்டத்திற்கான உத்தியை வகுக்க உதவுகிறது: ஒரு கணிக்கப்பட்ட மதிப்பை அடைய நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அதற்கேற்றபடி உங்கள் முதலீடுகளின் உத்தியை வகுப்பதற்கும் திட்டமிடுவதற்கும் அது உதவியாக இருக்கும்.
பொதுவான கேள்விகள்
இலக்கு (கோல்) அடிப்படையிலான எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் என்பது, முதலீட்டாளர்கள் இலக்கு வைத்திருக்கும் மெச்சூரிட்டி தொகையை அடைய அவர்கள் SIP முதலீடுகளாக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகின்ற ஓர் ஆன்லைன் கருவியாகும்.