மியூச்சுவல் ஃபண்ட்ஸில் ஒருவர் தினமும் முதலீடு செய்ய வேண்டுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் ஒருவர் தினமும் முதலீடு செய்ய வேண்டுமா? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

குழந்தைப் பருவத்தில் நாம் முயலும், ஆமையும் என்ற பிரபலமான கதையைக் கேட்டிருப்போம் - நிதானம் பிரதானம் என்பது அந்தக் கதையின் நீதி. முதலீடுகள் உள்பட வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் நாம் இந்த நீதியைத் தொடர்புபடுத்துகிறோம். முதலீட்டாளர்களின் மத்தியில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள் (SIP) பிரபலமாகி வருவது ஆச்சரியமான விஷயமில்லை. நீண்டகாலத்தில் முதலீட்டைப் பெருக்குவதற்கான நிலையான சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கு சிறந்த வழியாக SIP உள்ளது.

முதலீட்டைப் பெருக்குவதற்கு நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையைச் சார்ந்து, வாராந்திரமாகவோ, மாதாந்திரமாகவோ அல்லது காலாண்டாகவோ SIP -ஐத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். சில ஃபண்ட் ஹவுஸ்கள் தினசரி SIP -ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால், பிரபலமாக இருக்கக்கூடிய மாதாந்திர முதலீட்டுத் தேர்வுடன் ஒப்பிடும்போது, தினசரி SIP அதிகளவில் முதலீட்டுப் பெருக்கத்தை ஏற்படுத்திடுமா? SIPகள் நீண்டகால இலக்குத் திட்டமிடலுக்கானவை என்பதால், 10-15 வருடக் காலகட்டத்தில் சேரும் தொகையில் அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால், குறுகியகாலகட்டத்திலான பலனின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். தினசரி SIPகள் மாதத்தின் ஒன்று முதல் இருபது தேதி வரை பரிவர்த்தனைகளை ஏற்படுத்திடும் என்பதால், உங்களின் கணக்கு நிர்வாகத்தில் சிரமம் ஏற்படலாம். “பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது”? என்று இன்னும் யோசிக்கிறீர்களா? மாதாந்திர SIP, உங்களுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்திடும்.

345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்