Skip to main content

புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவுகளை எடுங்கள்

எங்கள் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் ரிட்டர்ன்களை மதிப்பிடுங்கள்.

SIP Calculator
எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர்

உங்கள் மாதாந்திர SIP முதலீட்டின் எதிர்கால மதிப்பைக் கணக்கிடுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்
goal sip calculator
இலக்கு (கோல்) SIP கால்குலேட்டர்

உங்கள் இலக்கை அடையத் தேவையான மாதாந்திர SIP முதலீட்டைக் கண்டறியுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்
smart goal calculator
ஸ்மார்ட் கோல் கால்குலேட்டர்

உங்கள் தற்போதைய முதலீடுகளைக் கருத்தில் கொண்டு, தேவையான SIP அல்லது லம்ப்சம் தொகையைக் கணக்கிடுவதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளைத் திட்டமிடுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்
inflation calculator
இன்ஃபிளேஷன் (பணவீக்க) கால்குலேட்டர்

உங்கள் தற்போதைய செலவினங்கள் மற்றும் எதிர்கால இலக்குகளின் மீது பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கணக்கிடுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்
Cost of delay calculator
தாமதத்தின் விலை (காஸ்ட் ஆஃப் டிலே) கால்குலேட்டர்

முதலீட்டைத் தாமதிக்கப் போகிறீர்களா? உங்கள் செல்வப் பெருக்கத்தில் அந்தத் தாமதம் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்
Lumpsum Investment Calculator
லம்ப்சம் (மொத்தத் தொகை) முதலீட்டு கால்குலேட்டர்

லம்ப்சம் முதலீட்டில் உங்கள் சாத்தியமான ரிட்டர்னைக் கணக்கிடுங்கள்
 

இப்போதே கணக்கிடுங்கள்
Retirement Planning Calculator
ரிட்டையர்மென்ட் பிளானிங் கால்குலேட்டர்

உங்கள் செலவினங்கள் மற்றும் மாதாந்திர முதலீட்டின் அடிப்படையில் உங்கள் பணிஓய்வு கார்பஸ் தொகையை மதிப்பிடுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்
Step-Up SIP Calculator
ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டர்

தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட சதவீதம் உங்கள் SIP-ஐ அதிகரித்துக்கொண்டே செல்லும்போது உங்கள் SIP முதலீடுகளின் எதிர்கால மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று கணக்கிடுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்
Systematic Withdrawal Plan (SWP) Calculator
சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) கால்குலேட்டர்

முதலீட்டில் இருந்து பெறும் வட்டியைக் கருத்தில் கொண்டு, தொடர்ச்சியாக ஒரு நிலையான தொகையை வித்ட்ரா செய்த பிறகு ஒரு முதலீட்டின் இறுதி மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று கணக்கிடுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்

கால்குலேட்டர்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள்

finance-planning
எங்கிருந்தும் நிதித் திட்டமிடலாம்
saves-time
நேரத்தை சேமிக்கலாம்
easy-to-use
பயன்படுத்த எளிதானது
helps-make-informed-decisions
விவரமான முடிவுகளை எடுக்க உதவுகிறது

மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் என்பது என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் என்பது ஒரு ஃபண்டில் நீங்கள் செய்யும் முதலீட்டிற்குக் கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்களையும் உங்கள் முதலீட்டின் எதிர்கால மதிப்பையும் கணக்கிடுவதற்கு உதவும் ஆன்லைன் கருவியாகும். தொடக்கத்தில் முதலீடு செய்யும் தொகை, எதிர்பார்க்கப்படும் ரிட்டர்ன் விகிதம், முதலீடு செய்து வைக்கும் கால அளவு, முதலீடு செய்யும் இடைவேளை போன்ற பல்வேறு காரணிகளை இந்தக் கருவி கருத்தில் கொள்கிறது.
இருப்பினும், மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் வழங்குவது, நீண்ட கால அளவில் முதலீட்டின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று காட்டும் விளக்கம் மட்டுமே, முதலிட்டிற்குக் கிடைக்கும் உண்மையான ரிட்டர்னின் மதிப்பு கிடையாது.

மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் உங்களுக்கு எப்படி உதவுகிறது?

இந்த நவீன காலத்தில் Mutual Funds Sahi Hai உங்களுக்காக வழங்குகின்ற ஆன்லைன் மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர்கள் உங்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவுகின்றன. அதில் முக்கியமான சில:

  1. முதலீட்டின் வேரியபிள்களை முடிவு செய்ய முதலீட்டாளருக்கு உதவுகிறது: கால்குலேட்டர் வழங்கும் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு முதலீட்டாளர் முதலீட்டுக் காலம், எதிர்பார்க்கப்படும் ரிட்டர்ன்கள், தொடக்க முதலீட்டுத் தொகை போன்ற முதலீட்டு வேரியபிள்களை முடிவு செய்ய முடியும்.
  2. எதிர்கால உத்திகளைத் திட்டமிட உதவுகிறது: கால்குலேட்டர் வழங்கும் மதிப்பிடப்பட்ட ரிட்டர்ன்களுக்கு ஏற்ப, உங்கள் எதிர்கால நிதி உத்திகளை நீங்கள் திட்டமிடலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது?

மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர்கள், நீங்கள் வழங்கும் வேரியபிள்களுக்கு ஏற்ப முதலீட்டின் ரிட்டர்ன்களை மதிப்பிட எளிய அல்காரிதத்தைப் பயன்படுத்துகின்றன.

இது பயன்படுத்த எளிதான கருவியாகும், முதலீட்டாளர்கள் தானே கடினமான கணக்கீடுகளைச் செய்ய வேண்டிய அவசியத்தை இல்லாமல் செய்கிறது.

ஒரு முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டு வழிகளில் முதலீடு செய்யலாம்: அவை SIP மற்றும் லம்ப்சம் ஆகியவையாகும். இந்த இரண்டு வகை முதலீடுகளுக்கும் எதிர்கால மதிப்பீடுகளைத் தெரிந்துகொள்ள முதலீட்டாளருக்கு இந்தக் கால்குலேட்டர் உதவுகிறது.

ஆனால், இந்தக் கால்குலேட்டர் உங்களுக்கு மதிப்பீடுகளை வழங்க, நீங்கள் மூன்று முக்கிய விவரங்களை வழங்க வேண்டும், அவை:

  • முதலீட்டுத் தொகை
  • முதலீட்டுக்காலம்
  • மதிப்பிடப்பட்ட ரிட்டர்ன் விகிதம்

மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் பயன்படுத்தும் ஃபார்முலா:

a) லம்ப்சம் அல்லது ஒரு முறை செய்யப்படும் முதலீடுகளுக்கு -

எதிர்கால மதிப்பு = தற்போதைய மதிப்பு (1 + r/100)^n 

r = மதிப்பிடப்பட்ட ரிட்டர்ன் விகிதம்

n = முதலீட்டுக் காலம்

b) SIPகளுக்கு -

FV = P [(1+i)^n-1]*(1+i)/i

FV = எதிர்கால மதிப்பு

P = SIP மூலம் நீங்கள் முதலீடு செய்யும் அசல் தொகை

i = கூட்டு ரிட்டர்ன் விகிதம்

n = முதலீட்டுக் காலம் (மாதங்களில்)

r = எதிர்பார்க்கப்படும் ரிட்டர்ன் விகிதம்

மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டரை எப்படிப் பயன்படுத்துவது?

இந்த மியூச்சுவல் ஃபண்ட் ரிட்டர்ன்ஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதற்கான படிகள் பின்வருமாறு:

படி 1: உங்கள் முதலீட்டுத் தொகை மற்றும் முதலீட்டு வகையைக் குறிப்பிடவும் (SIP அல்லது லம்ப்சம்)

படி 2: உங்கள் முதலீட்டுக் காலத்தைத் தேர்வு செய்யவும்.

படி 3: மதிப்பிடப்பட்ட ரிட்டர்ன் விகிதத்தை வழங்கவும்.

மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் நன்மைகள்

மியூச்சுவல் ஃபண்ட் ரிட்டர்ன்ஸ் கால்குலேட்டர் ஒரு முக்கியமான கருவியாகும். இது பின்வரும் வழிகளில் முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கும்:

  1. கூட்டு வட்டியின் ஆற்றலைத் தெரிந்துகொள்ளலாம்: நீண்ட காலம் முதலீடு செய்து வைத்திருப்பதன் மூலம் நீங்கள் ரிட்டர்ன்களை அதிகப்படுத்தலாம். நீண்ட காலவாக்கில் உங்கள் முதலீட்டிற்கு நீங்கள் எவ்வளவு ரிட்டர்ன் பெறலாம் என்றும் மொத்தமாக எவ்வளவு வட்டி கிடைக்கும் என்றும் கணக்கிட்டுப் பார்க்க மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டரைப் பயன்படுத்திப் பாருங்கள்.
  2. SIP அல்லது லம்ப்சம் முதலீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்: SIPகள் மூலமும் லம்ப்சம் முதலீடுகள் மூலமும் கிடைக்கும் ரிட்டர்ன்களை நீங்கள் கணக்கிடலாம். இந்த விவரத்தைக் கொண்டு நீங்கள் SIPகளில் முதலீடு செய்வதா லம்ப்சம் முதலீடு செய்வதா என்பதை நீங்கள் தெளிவாக முடிவெடுக்க முடியும்.
  3. நீங்களே கணக்கிடும்போது ஏற்படக்கூடிய பிழைகளைத் தவிர்க்கலாம்: நீங்களே கணக்கிடும்போது நேரக்கூடிய பொதுவான பிழைகள் அல்லது மனிதப் பிழைகளை கால்குலேட்டர் பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கலாம்.
  4. எதிர்கால முதலீட்டு உத்திகளைத் திட்டமிட உதவுகிறது: நீங்கள் மதிப்பீடுகளின் அடிப்படையில் எதிர்கால உத்திகளைத் திட்டமிட உதவுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர்கள் என்பவை முதலீட்டுத் தொகை, முதலீட்டுக் கால அளவு, வட்டி விகிதம் போன்ற குறைந்தபட்ச விவரங்களைக் கொண்டு, மதிப்பிடப்பட்ட ரிட்டர்ன்களை உங்களுக்காகக் கணக்கிட்டு வழங்கக்கூடிய ஆன்லைன் கருவிகளாகும்.

பொறுப்புதுறப்பு 

இந்தக் கால்குலேட்டர்கள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, இவை உண்மையான ரிட்டர்ன்களைக் குறிப்பிடவில்லை. மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒரு நிலையான ரிட்டர்ன் விகிதம் கொண்டவை அல்ல, மேலும் ரிட்டர்ன் விகிதத்தைக் கணிப்பது முடியாது. பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.