நீண்டகால முதலீட்டால் குறைந்த ரிஸ்க் இருக்குமா?

நீண்டகால முதலீட்டால் குறைந்த ரிஸ்க் இருக்குமா? zoom-icon
கால்குலேட்டர்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸிலான முதலீடுகளுக்கு பொருத்தமான கால அளவு தேவை. சரியான கால அளவிலான முதலீடு, எதிர்பார்க்கப்படும் முதலீட்டு ரிட்டர்ன்களை பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை மட்டுமல்லாது, முதலீட்டில் உள்ள ரிஸ்க்கையும் குறைத்திடும்.

“ரிஸ்க்” என்றால் என்ன? எளிமையான மொழியில், முதலீட்டுச் செயல்திறனின் ஏற்ற, இறக்கங்கள் மற்றும் முதலீட்டு மூலதனத்தின் தேய்மான வாய்ப்புகள் என்று ரிஸ்க்கை குறிப்பிடலாம். நீண்டகாலத்துக்கு முதலீட்டைச் செய்வதன் மூலம், ஒருசில வருடங்களில் ஏற்படும் குறைந்த/எதிர்மறையான ரிட்டர்ன்களும், ஒருசில வருடங்களில் ஏற்படும் நல்ல ரிட்டர்ன்களும் ஒன்றிணைந்து நியாயமான சராசரி ரிட்டர்ன்களை வழங்கிடும். எனவே, வருடாவருடம் மாறுபடுகின்ற ரிட்டர்ன்களின் சராசரியின் மூலம் நிலையான நீண்டகால ரிட்டர்னை முதலீட்டாளர்கள் பெறமுடியும்.

ஒவ்வொரு சொத்து வகை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் வகைக்கும், பரிந்துரைக்கப்படும் கால அளவு மாறுபடக்கூடும். ஒரு முதலீட்டுத் தீர்மானத்தைச் செய்வதற்கு முன்பு முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, திட்டம் தொடர்பான ஆவணங்களை படித்திடுங்கள்.

343
478
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்