பணம் லாக் செய்யப்படாது. அது முதலீடு செய்யப்படும்!

Video
கால்குலேட்டர்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில், பணம் லாக் செய்யப்படாது. அது முதலீடு செய்யப்படும்!

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யும்போது கேட்கப்படும் பொதுவான ஒரு கேள்வி, ‘என் பணம் லாக் செய்யப்படுமா?’

இங்கு, இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும்:

a. மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், பணமானது முதலீடு செய்யப்படுகிறது, லாக் செய்யப்படுவதில்லை, அதனால் அந்தப் பணம் எப்போதுமே உங்களுடையதுதான். அது தொழில்முறை ஃபண்ட் மேனேஜரால் நிர்வகிக்கப்படுகிறது அவ்வளவுதான்.

b. உங்கள் பணம் எளிதில் அணுகத்தக்க வகையில் இருக்கும். ஒரு மியூச்சுவல் ஃபண்டின் கட்டமைப்பு, அது நெகிழ்தன்மையுடன் அணுகப்படுவதை உறுதி செய்கிறது. உங்கள் முதலீட்டை நீங்கள் பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ வெளியே எடுக்க முடியும். உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதம் அல்லது ஒவ்வொரு காலாண்டில் ஒரு குறிப்பிட்ட தேதியன்று உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு நிலையான தொகையைப் பரிமாற்றுவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு நீங்கள் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பதைத் தேர்வுசெய்து கொள்ள முடியும். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள முதலீட்டை, அதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் மற்றொரு திட்டத்துக்கு மாற்றவும் நீங்கள் தேர்வுசெய்து கொள்ள முடியும். நேர்த்தியாக ஆவணம் செய்யப்பட்ட விரிவான/ எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலான கணக்கு அறிக்கையை நீங்கள் பெறுவீர்கள்.

உங்களுக்கு விருப்பமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து, அதன் நெகிழ்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பணமாக்குதலை அனுபவித்து மகிழ்ந்திடுங்கள். வேறு விதமாகக் கூற வேண்டுமானால், தொழில்முறை மேனேஜர்களின் அக்கறையுடன் கூடிய மேம்பட்ட முதலீட்டு அனுபவத்தைப் பெற்றிடுங்கள்.

346
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்