எனது முதலீட்டை எப்போது நான் வித்டிரா செய்யலாம்?

என் முதலீட்டை நான் எப்போது வெளியே எடுக்கலாம்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒரு ஓப்பன் எண்டு திட்டத்தில் உள்ள முதலீட்டை எந்த சமயத்திலும் பணமாக்க முடியும். 3 வருட லாக்-இன் காலகட்டம் கொண்ட ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டம் (ELSS) தவிர பிற திட்டங்களில் முதலீட்டைப் பணமாக்குவதற்கான கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது.

தங்களின் முதலீட்டைப் பணமாக்கும் போது பொருந்தக்கூடிய வெளியேற்றக் கட்டணங்களை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். பொருந்தக்கூடிய பட்சத்தில் மட்டுமே, வழங்கப்படக்கூடிய இறுதித் தொகையில் இருந்து வெளியேற்றக் கட்டணங்கள் கழிக்கப்படும். குறுகிய கால அல்லது ஊக அடிப்படையிலான முதலீட்டாளர்கள் திட்டத்தினுள் நுழைவதைத் தடுப்பதற்காகவே, இந்த வெளியேற்றக் கட்டணத்தை AMCகள் விதிக்கின்றன.

குளோஸ்டு எண்டு திட்டங்கள் முதிர்வின் போது தானாக பணமாக்கப்படும் என்பதால், அவற்றில் வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படுவதில்லை. எனினும், குளோஸ்டு எண்டு திட்டங்களின் கீழ் உள்ள யூனிட்கள், ஒரு அங்கீகரிக்கப்பட்ட பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் மற்றும் இந்தப் பங்குச்சந்தையின் மூலம் மட்டுமே முதலீட்டாளர்கள் தங்களின் யூனிட்களை மற்றவர்களுக்கு விற்கமுடியும்.

எளிதாகப் பணமாக்கக்கூடிய இந்தியாவிலுள்ள முதலீட்டுத் துறைகளில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சிறந்த ஒன்றாக உள்ளது மற்றும் ஒவ்வொரு நிதித் திட்டத்துக்குமான உகந்த சொத்து வகையாகவும் உள்ளது.

349
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்