எனது முதலீட்டில் இருந்து எவ்வளவு வித்டிரா செய்யலாம்?

என் முதலீட்டில் இருந்து எவ்வளவு பணத்தை எடுக்க முடியும்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்கள், ஓப்பன் எண்டு திட்டங்களாக உள்ளன. இது முதலீட்டாளர்களை எந்த சமயத்திலும் எந்தக் கட்டுப்பாடின்றி ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகையையும் எடுப்பதற்கு அனுமதித்திடும்.

அறங்காவலர் வாரியத்தின் மூலம் எடுக்கப்படும் தீர்மானத்தின்படி, ஒருசில அசாதாரணச் சூழல்களின் கீழ் மட்டுமே, திட்டங்களின் மீது பணமாக்குதலின் மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை வழங்கக்கூடிய அனைத்து ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டங்களுக்கும் (ELSS) 3 வருட ‘லாக் இன்’ காலகட்டம் உள்ளது. எனினும், இந்தக் காலகட்டத்தின் போது இந்தத் திட்டங்களின் மூலம் அறிவிக்கப்படும் டிவிடென்ட்களை எந்தக் கட்டுப்பாடுமின்றி பெற்றுக்கொள்ள முடியும். திட்டங்களின் வேறு எந்த வகைகளும் இதுபோன்ற லாக் இன்னை செயல்படுத்த முடியாது. முன்முதிர்வு பணமெடுத்தல் சமயத்தில், குறுகியகால முதலீடுகள் திட்டத்தினுள் நுழைவதைத் தடுப்பதற்காக சில திட்டங்களில் வெளியேற்றக் கட்டணங்கள் வசூலிக்கப்படலாம். சமர்ப்பிக்கப்பட முடியக்கூடிய குறைந்தபட்சத் தொகைகளை AMC குறிப்பிட்டிடும். ஒரு முதலீட்டைச் செய்வதற்கு முன்பு திட்டம் தொடர்பான ஆவணங்களில் உள்ள அனைத்து தகவல்களையும் முதலீட்டாளர் வாசிக்க வேண்டும்.

குளோஸ்டு எண்டு திட்டங்கள் ஒரு நிலையான காலகட்டத்தைக் கொண்டவை மற்றும் திட்டத்தின் முடிப்பு/முடிவுத் தேதிக்கு முன்பு பணமெடுத்தலைச் செய்வதை AMC அனுமதிக்காது. எனினும், எல்லா குளோஸ்டு எண்டு ஃபண்ட்களின் யூனிட்களும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் மற்றும் பணமாக்க விரும்பும் முதலீட்டாளர் சந்தையால் தீர்மானிக்கப்படும் ஒரு விலையில் மற்றொரு வாங்குனரிடம் யூனிட்களை விற்க வேண்டும்.

349
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்