முதலீடு செய்ய எது சிறந்த விருப்பம்: ETFகள் அல்லது இன்டெக்ஸ் ஃபண்டுகள்?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

இன்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்களும், ETFகளும் செயலற்ற முதலீட்டுக் கருவிகள் ஆகும். இவை அடிப்படை பெஞ்ச்மார்க் இன்டெக்ஸில் முதலீடு செய்கின்றன. இன்டெக்ஸ் ஃபண்ட்களும் மியூச்சுவல் ஃபண்ட்களைப் போலவே செயல்படும் அதேநேரத்தில், ETFகள் பங்குகளைப் போன்று வர்த்தகம் செய்கின்றன. அதே செயலற்ற முதலீட்டு மூலோபாயத்திற்கு ஒன்றிற்குப் பதிலாக இன்னொன்றைத் தேர்வு செய்வது உங்கள் முதலீட்டு விருப்பத்தைப் பொறுத்தது.

இன்ட்ரா டே டிரேட்கள், வரம்புகள் அல்லது ஆர்டர்கள் மற்றும் குறுகிய விற்பனைக்கு ETFகள் பொருத்தமாக இருக்கும். ஆனால் சந்தையில் முதலீடு செய்வதற்கான சரியான நேரத்தை நீங்கள் கணிக்க இயலாவிட்டால், இன்டெக்ஸ் ஃபண்ட்கள் உங்களுக்கு ஏற்றவை. அடிக்கடி பரிவர்த்தனைகள் செய்வது கமிஷன் செலவுகளை உயர்த்தலாம் மற்றும் ETFகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் ரிட்டர்ன்களைக் குறைக்கலாம். மேலும் இன்டெக்ஸ் ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது, இவை குறைந்த செலவு விகிதத்தையும் கொண்டிருக்கின்றன. ஆனால் உங்கள் நிதித் தேவைகளுக்கு ஏற்ப நீண்டகால இலக்குகளுக்கான குரோத் தேர்வு மற்றும் வழக்கமான வருமானத்திற்கான டிவிடென்ட் தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளை இன்டெக்ஸ் ஃபண்ட்கள் உங்களுக்கு வழங்குகின்றன. இன்டெக்ஸ் ஃபண்டில் SIP மூலம் சிறிய அளவுகளில் தொடர்ந்து முதலீடு செய்யலாம். ETFகளைப் போல் அல்லாமல், இன்டெக்ஸ் ஃபண்ட்களில் முதலீடு செய்ய உங்களுக்கு ஒரு டீமேட் கணக்கு தேவையில்லை. 

செயலற்ற முதலீட்டின் மூலம் இரண்டும் பரந்த சந்தைக்கான வெளிப்பாட்டை அளிக்கின்ற அதேசமயத்தில், அவற்றின் செயல்பாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளைக் கொண்டு தீர்மானத்தைச் செய்யலாம். மும்பையிலிருந்து கோவாவுக்குப் பயணிக்கும் போது, நீங்கள் ஒரு ரயிலையோ, இரவுநேரப் பஸ்ஸையோ தேர்வு செய்யலாம். இரண்டுமே உங்களின் இறுதி நோக்கத்தைப் பூர்த்தி செய்யும்போது, வசதிக்கேற்ற தேர்வைச் செய்வது முற்றிலும் உங்கள் கையில்தான் உள்ளது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்