மியூச்சுவல் ஃபண்டுகளின் பல்வேறு வகைகள் என்னென்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

பல்வேறு வகையான நபர்களின், பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன. பெரும்பாலும், இதில் மூன்று வகைகள் உள்ளன.

  1. ஈக்விட்டி அல்லது குரோத் ஃபண்ட்கள்
  • இவை பெருமளவில் ஈக்விட்டிகளில் முதலீடு செய்யும், உதாரணத்திற்கு, நிறுவனங்களின் பங்குகள்
  • இதன் முதன்மை நோக்கம் செல்வத்தை உருவாக்குதல் அல்லது மூலதனப் பெருக்கம்.
  • நீண்டகால முதலீட்டுக்கு இவை ஏற்றவை மற்றும் அதிக ரிட்டர்ன்களை வழங்கக்கூடியவை.
  • இதற்கான உதாரணங்கள்,
    • பெரும் நிறுவனங்களில் பெருமளவில் முதலீடு செய்யக்கூடிய “லார்ஜ் கேப்” பண்ட்கள்,
    • நடுத்தர அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய “மிட் கேப்”ஃபண்ட்கள்.
    • சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய “ஸ்மால் கேப்” பண்ட்கள்,
    • பெரும், நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய “மல்டி கேப்” பண்ட்கள்.
    • “வர்த்தகத்தின் ஒரு குறிப்பிட்ட வகை தொடர்பான நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய “செக்டார்” பண்ட்கள். உதாரணத்திற்கு, டெக்னாலஜி ஃபண்ட்கள், தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யும்.
    • ”தீமேட்டிக்” ஃபண்ட்கள் பொதுவான தீமில் முதலீடு செய்யும். உதாரணத்திற்கு, இன்ஃப்ராஸ்டிரக்சர் துறையின் வளர்ச்சியில் இருந்து பலனடையும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் இன்ஃப்ராஸ்டிரக்சர் ஃபண்ட்கள்.
    • டேக்ஸ் சேவிங்க்ஸ் ஃபண்ட்ஸ்
  1. இன்கம் அல்லது பாண்டு அல்லது ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்கள்
  • இவை அரசாங்கப் பத்திரங்கள் அல்லது பாண்டுகள், கமர்ஷியல் பேப்பர்கள் அல்லது கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட்களின் சான்றிதழ்கள் மற்றும் டிரஷரி பில்கள், கமர்ஷியல் பேப்பர்கள் போன்ற பணச்சந்தை சார்ந்த ஆவணங்கள் போன்ற நிலையான வருமானத்தைத் தரும் பத்திரங்களில் முதலீடு செய்யும்.
  • இவை ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீடுகள் மற்றும் வருவாய் உருவாக்கத்துக்கு ஏற்றவை.
  • உதாரணத்திற்கு, லிக்விட், ஷார்ட் டெர்ம், ஃப்ளோட்டிங் ரேட், கார்ப்பரேட் டெப்ட், டைனமிக் பாண்டு, கில்டு ஃபண்ட்ஸ் போன்றவை.
  1. ஹைபிரிட் ஃபண்ட்கள்
  • இவை ஈக்விட்டி மற்றும் நிலையான வருவாய் தரும் ஃபண்ட்கள் இரண்டிலும் முதலீடு செய்வதால் சிறந்த வருமானத்துக்கான சாத்தியத்தையும் வருவாய் உருவாக்கத்தையும் வழங்கிடும்.
  • இதற்கான உதாரணங்கள், அக்ரசிவ் பேலன்ஸ்டு ஃபண்ட்கள், கன்சர்வேட்டிவ் பேலன்ஸ்டு ஃபண்ட்கள், பென்ஷன் திட்டங்கள், குழந்தை திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருவாய்த் திட்டங்கள் போன்றவை.
345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்