மியூச்சுவல் ஃபண்ட்ஸில் மைனர் நபர்கள் (பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள்) முதலீடு செய்ய முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் மைனர் நபர்கள் (பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள்) முதலீடு செய்ய முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

18 வயதுக்குட்பட்ட (மைனர்) எந்தவொருவரும், பெற்றோர்/சட்டபூர்வ பாதுகாவலர்களின் உதவியுடன், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய முடியும். பெற்றோர்/பாதுகாவலரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தனிப்பட்ட கணக்குதாரராக மைனர் நபர் இருக்க வேண்டும். மைனர் மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களில், கூட்டுக் கணக்கு (ஜாயிண்ட் அக்கவுண்ட்) அனுமதிக்கப்படுவதில்லை. மைனர் நபருக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது அவருடைய உயர் கல்வி போன்ற முதலீட்டுக்கான இலக்கை கொண்டிருக்க வேண்டும்.

குழந்தைக்கு 18 வயதாகி மேஜரான பின்பு, மைனர் கணக்கின் தனிப்பட்ட கணக்குதாரரின் நிலையை மைனரில் இருந்து மேஜராக மாற்ற வேண்டும். இல்லையென்றால், கணக்கிலுள்ள எல்லாப் பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட்டுவிடும். 18 வயதுக்கு மேற்பட்ட நிலையில், எந்த முதலீட்டாளர்களையும் போன்று, பொருந்தக்கூடிய வரிப் பொறுப்புகளை அந்த தனிப்பட்ட கணக்குதாரர் ஏற்க வேண்டும். குழந்தை மைனராக இருக்கும் வரை, குழந்தையின் போர்ட்ஃபோலியோவில் இருந்து பெறப்படும் இலாபங்கள் அனைத்தும், பெற்றோரின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, பொருந்தக்கூடிய வரிகளை பெற்றோர்கள் செலுத்த வேண்டியதாக இருக்கும். குழந்தை மேஜராக ஆன பின்பு, அவர் தனிப்பட்ட நபராகக் கருதப்பட்டு, அவர் மேஜரான பின்பான மாதங்களை அந்த வருடத்தில் கணக்கிட்டு அதற்கேற்ப அவர் வரி செலுத்த வேண்டும்.

350
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்