ஈக்விட்டி மற்றும் டெப்ட் ஃபண்டுகளில் பல்வேறு ரிஸ்க் காரணிகள் இருக்கின்றதா?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நிறுவனங்களின் பங்குகளில் ஈக்விட்டி ஃபண்ட்கள் முதலீடு செய்கின்றன மற்றும் நிறுவனங்களின் பாண்டுகள் மற்றும் பணச்சந்தை சார்ந்த ஆவணங்களில் டெப்ட் ஃபண்ட்கள் முதலீடு செய்கின்றன. இந்த ஃபண்ட்கள் நமது பணத்தை வெவ்வேறு சொத்துக்களில் முதலீடு செய்வதால், அவை அடிப்படைச் சொத்து வகைகளைப் பாதிக்கும் ரிஸ்க் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன.

சந்தை இயக்கங்களால் பங்குகள் பாதிக்கப்படுகின்றன. எனவே ஈக்விட்டி ஃபண்ட்களை பாதிக்கும் மிகப்பெரிய ரிஸ்க் காரணி மார்க்கெட் ரிஸ்க். எக்ஸ்சேஞ்ச் விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக சர்வதேச ஈக்விட்டி ஃபண்ட்களும் கரன்ஸி ரிஸ்க்கை எதிர்கொள்கின்றன. ஒரு நிறுவனத்தின் வணிக மற்றும் பொருளாதாரச் சூழலைப் பாதிக்கும் காரணிகளால் பங்குகள் நேரடியாக பாதிக்கப்படுவதால், பொருளாதார மற்றும் தொழில்துறை ரிஸ்க்குகளுக்கு ஈக்விட்டி ஃபண்ட்கள் அதிகம் ஆளாகின்றன.

பாண்டுகள் ஒரு வகையான கடன் கருவிகளே என்பதால் வட்டிவிகித மாற்றங்களால் பாண்டுகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, டெப்ட் ஃபண்டை பாதிக்கும் மிகப்பெரிய ரிஸ்க் காரணி வட்டிவிகித ரிஸ்க் ஆகும். பணம் செலுத்தத் தவறுதல் மற்றும் தரமதிப்பீட்டுக் குறைப்புகளுக்கு பாண்டுகள் உட்படுகின்றன. அதாவது பாண்டின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பேமெண்ட்களை பாண்டு வழங்குநர் செலுத்தத் தவறலாம் அல்லது பாண்டு பேமெண்ட்களைச் செலுத்த இயலாத வகையில் நிதி நெருக்கடியில் சிக்கிக்கலாம். எனவே டெப்ட் ஃபண்ட்கள் குறிப்பிடத்தக்க டிஃபால்ட் (பணம் செலுத்தத் தவறுதல்) மற்றும் கிரெடிட் ரிஸ்க்கை எதிர்கொள்கின்றன.

இரண்டு வகையான ஃபண்ட்களும் லிக்விடிட்டி ரிஸ்க்கை எதிர்கொள்கின்றன. அதாவது போர்ட்ஃபோலியோவிலிருக்கும் சில பங்குகள் அரிதாக வர்த்தகம் செய்யப்பட்டாலோ அல்லது அவற்றிற்கான தேவை இல்லாமல் இருந்தாலோ அவற்றை விற்பது கடினமாக இருக்கலாம்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்