மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆன்லைனில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

ஆன்லைன் வாயிலாக மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

உங்களின் முதல் விமானப் பயணம் நினைவில் உள்ளதா? உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு அல்லது குமட்டுவது போன்ற உணர்வு இருந்ததா? இறுதியாக, விமானம் வானில் பறந்து சென்ற பின்பு, உங்களுக்கு தைரியம் வந்தது, இல்லையா? 30,000 அடி உயரத்தில், சீட் பெல்ட் கட்டப்பட்ட நிலையில், பைலட்டுடன் கூடிய அக்கறையான கேபின் ஊழியர்களுடன் நீங்கள் பறக்கிறீர்கள்.

ஆன்லைனில் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதும் முதல் விமானப் பயணம் போன்றதுதான். தொடக்கத்தில் நீங்கள் உங்கள் பணம் எங்கு செல்லும் என்பது குறித்து கவலை கொண்டாலும், சரியான பெறுனரை அடைந்தால், பிற முறைகளைப் போன்று ஆன்லைன் முதலீட்டு முறைகளும் பாதுகாப்பானதுதான். ஆன்லைன் பேமெண்ட் தளங்கள், போதிய குறியாக்க நெறிமுறைகளுடன் பாதுகாப்பானவையாக இருக்கும் என்பதால், தரவுப் பரிமாற்றத்தின் போது உங்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தரவுகளைத் திருட முடியாது.

எந்த நேரத்திலும், நீங்கள் உங்கள் எல்லா பரிவர்த்தனைகளையும் பார்க்க முடியும் என்பதாலும், வாங்க அல்லது விற்க முடியும் என்பதாலும் மற்றும் உங்கள் போர்ட்ஃபோலியோவின் செயல்திறனைக் கண்காணிக்க முடியும் என்பதாலும், ஆன்லைன் செயல்முறை மிகவும் வசதியானது. நீங்கள் ஆன்லைனில் முதலீடு செய்யும் போது, மியூச்சுவல் ஃபண்டின் கணக்கில் உங்கள் பணம் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், உங்களுக்கு ஒதுக்கப்படும் யூனிட்களை உங்கள் கணக்கில் உள்நுழைந்து பார்க்க முடியும். பாதுகாப்பு, வசதி போன்ற அம்சங்களைத் தவிர, ஆஃப்லைன் முறையைப் போன்றே ஆன்லைன் முறையும் உங்களுக்கு வெளிப்படைத்தன்மையை வழங்கிடும். சிஸ்டத்தினுள் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்!

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்