கில்ட் ஃபண்டுகள் என்பவை என்பவை எவை & நீங்கள் ஏன் அவற்றில் முதலீடு செய்ய வேண்டும்?

கில்ட் ஃபண்ட்கள் என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நீங்கள் ஒருவருக்குக் கடன் கொடுக்கும்போது முதலில் அவரது நம்பகத் தன்மையைப் பார்ப்பது மிக அவசியம். நம்பகத் தன்மையைப் பொறுத்தவரை யாரைக் காட்டிலும் ஒரு அரசை அதிகம் நம்பலாம். நீங்கள் கில்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்தால் அது பெரும்பாலும் மத்திய அல்லது மாநில அரசின் பாண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

“கில்ட்” என்பது கவர்மெண்ட் செக்யூரிட்டிகளைக் குறிக்கிறது. இவை அரசின் உடைமைகள் ஆகும். இவற்றில் மூன்று ஆண்டுகள் முதல் இருபது ஆண்டுகள் வரையிலான முதிர்ச்சிக் காலங்கள் உள்ள செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும். 10 ஆண்டுகள் தொடர்ச்சியான காலம் முதலீடு செய்யப்படும் கில்ட் ஃபண்ட்களுக்கே 10 ஆண்டுகளுக்கான லாக்-இன் காலம் பொருந்தும்.

SEBI வழிகாட்டுதலின்படி, கில்ட் ஃபண்ட்கள் குறைந்தது 80% பணத்தை கவர்மெண்ட் செக்யூரிட்டிகள் மற்றும் ஸ்டேட் டெவலப்மெண்ட் லோன்களில் (SDLகள்) முதலீடு செய்ய வேண்டும். மீதியை கேஷ் மற்றும் கேஷ் ஈக்வேலண்ட்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

கில்ட் ஃபண்ட்கள் செயல்படும் விதம்

அரசுக்குப் பணம் தேவைப்படும்போது அது அரசு சார்ந்த பாண்டுகளை வெளியிட்டு அதன் பேரில் பணத்தைக் கடனாக வாங்கும். அரசின் அத்தகைய செக்யூரிட்டிகளின் அடிப்படையில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) அரசுக்குக் கடன் வழங்கும்.

கில்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்வதால் பல பலன்கள் உள்ளன. அரசு பாண்டு மார்க்கெட்டில் பெரு நிறுவனங்கள்தான் பங்குபெறும். ரீடெய்ல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். ஆனால் சிறிய முதலீட்டாளர்கள், குறைந்த முதலீடுகளைச் செய்ய முடியாது. ஆனால் கில்ட் ஃபண்ட்கள் கவர்மெண்ட் செக்யூரிட்டிகளில் சிறிய தொகையைக்கூட முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. இதனால் வெவ்வேறு கவர்மெண்ட் செக்யூரிட்டிகளில் எளிதாக முதலீடு செய்யலாம். லாபமானது ஈல்டு டு மெச்சூரிட்டியை (YTM) பொறுத்ததாகும், YTM அதிகம் என்றால் கிடைக்கும் லாபம் குறையும், அது குறைவாக இருந்தால் லாபம் அதிகமாக இருக்கும். முதிர்ச்சி அடையும் காலம் வரை வைத்திருந்தால் பாண்டுகள் மீதான அரசு உத்தரவாதம் காரணமாக எந்தப் பாதிப்பும் இருக்காது.

வட்டி விகிதச் சுழற்சியைப் புரிந்துகொள்வதில் ஃபண்ட் மேனேஜர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். எந்த நேரத்தில் கவர்மெண்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்க இது உதவுகிறது. ஏனென்றால் பணவீக்கம் அதிகரிக்கும்போது வட்டி விகிதமும் அதிகரிக்கும்.

பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

284
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்