டெப்ட் ஃபண்டுகளின் பல்வேறு வகைகள் என்னென்ன?

டெப்ட் ஃபண்ட்களின் பல்வேறு வகைகள் என்னென்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

முதலீடு செய்யப்படும் செக்யூரிட்டிகளின் வகையைப் பொறுத்தும், அந்த செக்யூரிட்டிகளின் முதிர்வைப் (கால அளவு ) பொறுத்தும் டெப்ட் ஃபண்ட்கள் (டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்) பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.கார்ப்பரேட், வங்கிகள் மற்றும் அரசாங்கங்கத்தால் வழங்கப்படும் பாண்டுகள், கார்ப்பரேட்கள் வழங்கும் டெப்ட் பத்திரங்கள், கமர்ஷியல் பேப்பர்கள் போன்ற பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள், வங்கிகளின் மூலம் வழங்கப்படும் வைப்புச் சான்றிதழ்கள் (CDs) போன்றவை டெப்ட் செக்யூரிட்டிகளில் உள்ளடங்குகின்றன.

டெப்ட் ஃபண்ட்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:

  • ஓவர்நைட் ஃபண்ட்கள் – 1 நாள் முதிர்வு கொண்ட பத்திரங்களில் (செக்யூரிட்டிகள்) முதலீடு செய்திடும்
  • லிக்விட் ஃபண்ட்கள் - 90 நாட்களுக்குள் முதிர்வு பெறும் பணச் சந்தை சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்திடும் ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட்கள் - ஃப்ளோட்டிங் ரேட் டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும்
  • மிகவும் குறுகியகால ஃபண்ட்கள் – 3-6 மாதங்களில் முதிர்வு பெறக்கூடிய டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும்
  • குறைந்த கால ஃபண்ட்கள் – 6-12 மாதங்களில் முதிர்வு பெறக்கூடிய டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும்
  • பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள் - 1 ஆண்டுக்குள் முதிர்வு பெறக்கூடிய பணச் சந்தை சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்திடும்
  • குறுகியகால ஃபண்ட்கள் – 1-3 ஆண்டுகள் முதிர்வு காலகட்டம் கொண்ட செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும்
  • நடுத்தரகால ஃபண்ட்கள் – 3-4 ஆண்டுகள் முதிர்வு காலகட்டம் கொண்ட செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும்
  • நடுத்தரம் முதல் நீண்டகால ஃபண்ட்கள்- 4-7 ஆண்டுகள் முதிர்வு காலகட்டம் கொண்ட செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும்
  • நீண்டகால ஃபண்ட்கள் - நீண்ட காலகட்டம் கொண்ட கடன் பத்திரங்களில் (7 வருடங்களுக்கும் மேல்) முதலீடு செய்திடும்
  • கார்ப்பரேட் பாண்டு ஃபண்ட்கள் - கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்திடும்
  • வங்கி மற்றும் PSU ஃபண்ட்கள் - வங்கிகள், PSUகள், PFIகளின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திடும்
  • கில்ட் ஃபண்ட்கள் - மாறுபட்ட முதிர்வு காலங்களைக் கொண்ட அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்திடும்
  • 10 ஆண்டு சீரான காலகட்டம் கொண்ட கில்ட் ஃபண்ட்கள் - 10 வருட முதிர்வு காலகட்டம் கொண்ட அரசாங்க செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும்
  • டைனமிக் ஃபண்ட்கள் - பல்வேறு முதிர்வு காலங்களைக் கொண்ட நிலையான வருவாய் தரும் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும் கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட்கள் - உயர் தரமதிப்பீடுகளுக்கு கீழுள்ள கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்திடும்
398
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்