மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள வட்டி விகிதங்கள் என்னென்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

உலகில் எதுவுமே இலவசமாகக் கிடைக்காது. நாம் பயன்படுத்துகின்ற பொருட்கள் அல்லது சேவைகளுக்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு, பார்க்கிங் இடத்தில் வாகனத்தைப் பார்க் செய்கின்ற நேரத்திற்கு ஏற்ப, நீங்கள் அதற்கான பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்துவீர்கள். நீங்கள் ஒரு கூரியர் அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அனுப்புகின்ற பொருளின் எடை மற்றும் அனுப்பவேண்டிய இடத்தின் தொலைவுக்கு ஏற்ப நீங்கள் பணம் செலுத்துவீர்கள். நீங்கள் யாரிடமாவது பணத்தைக் கடனாகப் பெற்றால், அதனைத் திரும்பச் செலுத்தும் காலகட்டத்துக்கு ஏற்ப, வட்டித் தொகையை அவர் வசூலிப்பார். இது, வாங்கப்படுகின்ற அசல் தொகையின் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு வசூலிக்கப்படும். வழக்கமாக இது ஒரு வருடத்திற்கு குறிப்பிடப்படும்.

நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசாங்க அமைப்புகள் போன்றவை, பொது மக்களுக்கு பாண்டுகளை வழங்கி, அதிலிருந்து கிடைக்கும் டெப்ட் ஃபண்டுகளை தங்களின் வர்த்தகத்துக்கான மூலதனமாக அதனைப் பயன்படுத்திடும். இதுபோன்று வசூலிக்கும் தொகைக்கு, அவர்கள் ஒரு கட்டணத்தை வழங்கிடுவர். பொது மக்களிடம் இருந்து பணத்தைப் பெறுவதற்கு, அவர்கள் பாண்டுகளை வழங்கிடுவர். பாண்டுகளை வாங்கும் நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட்டியை வழங்கிடுவர். அதாவது, பாண்டுகளை வாங்குபவர்கள், தங்களின் பணத்தை முதலீடு செய்வதற்கு ஈடாக ஒரு கட்டணத்தை வழங்கிடுவர். நீங்கள் செய்யும் சேவிங்க்ஸ் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு, வங்கிகள் உங்களுக்கு வட்டி வழங்கிடும். அதேபோன்று, நிறுவனங்கள் பாண்டுகளை வழங்கும் போது அதற்கான வட்டியை வழங்கிடும். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தங்களின் போர்ட்ஃபோலியோவில் இத்தகைய பாண்டுகளை வாங்கும்போது, அவற்றிற்கு வட்டி வழங்கப்படும். பாண்டுகளின் விலைகள் வட்டிவீதங்களுடன் தலைகீழ் தொடர்பைக் கொண்டவை. அதாவது, அவை எப்போதுமே எதிர்மறையான போக்கில் இருக்கும்.

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்