சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) என்பது என்ன?
2 நிமிடம் 45 வினாடி வாசிப்பு

சிலர் தொடர்ச்சியான வருமானத்திற்காக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வார்கள், அவர்கள் டிவிடெண்ட் கிடைக்கக்கூடிய ஃபண்டுகள் உள்ளதா என்று பார்ப்பார்கள். இது போன்ற முதலீட்டாளர்களின் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக, சில மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள், குறிப்பாக டெப்ட் வகைகளில் உள்ளவை, மாதாந்திர அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் இன்கம் டிஸ்ட்ரிபியூஷன் கம் கேப்பிட்டல் வித்ட்ராயல் (IDCW) வசதிகளை வழங்குகின்றன. ஆனால் உபரித் தொகை இருந்தால் மட்டுமே இந்த வசதி கிடைக்கும். ஒரு ஸ்கீம் அடைந்த இலாபத்தில் இருந்தே டிவிடெண்ட் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் என்று எவ்வித உத்தரவாதமும் கிடையாது என்பதை மனதில் கொள்ள வேண்டியது முக்கியமாகும். தொடர்ச்சியாக நிலையான டிவிடெண்டுகளை வழங்க வேண்டும் என்று ஃபண்ட் ஹவுஸ்கள் விரும்பினாலும், பகிர்ந்தளிக்கக்கூடிய உபரித் தொகையைத் தீர்மானிப்பது மார்க்கெட்டின் நகர்வுகளும் அந்த ஃபண்டின் செயல்திறனுமே ஆகும்.
ஒரு முதலீட்டில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வித்ட்ரா செய்வதற்கு மற்றொரு வழியும் உள்ளது: அதுதான் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளானைப் (SWP) பயன்படுத்துவது. இதில், மாதாந்திர பே-அவுட்/வருமானமாக உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு நிலையான தொகையை நீங்கள் குறிப்பிட வேண்டும். பிறகு குறிப்பிட்ட தேதியில், அந்தக் குறிப்பிட்ட தொகைக்கு நிகரான மதிப்புள்ள யூனிட்டுகள் ரிடீம் செய்யப்படும். உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் ரூ.10 இலட்சம் முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று ரூ.10,000 கிடைக்க வேண்டும் என்று தேர்வுசெய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.10,000க்கு சமமான யூனிட்டுகள் ரிடீம் செய்யப்படும்.
டிவிடெண்டுக்கும் SWPகளுக்கும் வரி விதிப்பு முறை வேறுபடும் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆகவே முதலீட்டாளர்கள் அதற்கேற்பத் திட்டமிட வேண்டும்.
சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளானின் பொதுவான பண்புகள்:
- நெகிழ்த்தன்மை: வித்ட்ரா செய்ய வேண்டிய தொகையையும் இடைவெளியையும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.
- பேலன்ஸ் பெருகுதல்: வித்ட்ரா செய்தாலும், மீதமிருக்கும் தொகை முதலீடு செய்யப்பட்டே இருக்கும், ஆகவே ரிட்டர்ன்கள் கிடைக்கும் சாத்தியமுள்ளது.
- வரி விதிப்பு: SWP வித்ட்ராயலின் அசலுக்கு வரி விதிக்கப்படுவதில்லை, இதனால் மொத்தமாக ஒரே முறை வித்ட்ரா செய்வதுடன் ஒப்பிடும்போது இந்த முறையில் வரிச்சுமை குறையலாம்.
உங்கள் முதலீட்டில் SWP-ஐ அமைக்கும் வழிமுறை:
படி 1: சரியான ஃபண்டைத் தேர்வுசெய்யுங்கள் - உங்கள் முதலீட்டு இலக்குகளுக்கும் உங்கள் ரிஸ்க் தாங்கும் திறனுக்கும் பொருத்தமான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வுசெய்யுங்கள்.
படி 2: வித்ட்ரா செய்ய வேண்டிய தொகையை முடிவு செய்யுங்கள் - உங்கள் வழக்கமான செலவுகளுக்குத் தேவைப்படும் ஒரு நிலையான தொகையைத் தீர்மானியுங்கள்.
படி 3: கால இடைவெளியை அமைத்திடுங்கள் - எவ்வளவு கால இடைவெளிகளில் வித்ட்ரா செய்ய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யுங்கள் (மாதாந்திரம், காலாண்டுக்கு ஒருமுறை போன்று).
படி 4: SWP - ஐத் தொடங்குங்கள் - உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் வழியாக, அல்லது நிதி ஆலோசகர் வழியாக பிளானைத் தொடங்குங்கள், அல்லது குறைவான செலவு விகிதங்களுக்கு, AMC-இன் இணையதளத்தின் வழியாக டைரக்ட் பிளானின் கீழ் நீங்களே நேரடியாகத் தொடங்குங்கள்.
படிவத்தின் மேற்பகுதி
படிவத்தின் கீழ்ப்பகுதி
படி 5: உங்கள் முதலீட்டைக் கண்காணியுங்கள் - நீடித்து நிலைக்கும் தன்மையை உறுதிசெய்துகொள்ள, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உங்கள் மீதமுள்ள கார்ப்பஸ் தொகையை ஆய்வு செய்யுங்கள், தேவைப்பட்டால் உரிய மாற்றங்களைச் செய்யுங்கள்.
இந்த வகை முதலீட்டையும் வித்ட்ராயலையும் செய்வதற்கு முன்பு நீங்கள் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:
- கார்ப்பஸ் தொகையின் நீடித்து நிலைக்கும் தன்மை: உங்கள் முதலீட்டின் அளவு மற்றும் எதிர்பார்க்கும் ரிட்டர்ன்களுக்கு ஏற்ப உங்கள் வித்ட்ரா தொகையை அமைத்திடுங்கள்.
- மார்க்கெட் செயல்திறன்: மார்க்கெட்டின் நிலவரங்களுக்கு ஏற்ப உங்கள் முதலீட்டின் மதிப்பு மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- வெளியேற்றக் கட்டணமும் பிற கட்டணங்களும்: SWP கால அளவில் வித்ட்ரா செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
- பணவீக்கம்: பணவீக்கமும் காலப்போக்கில் உங்கள் வாங்கும் திறனைக் குறைக்கக்கூடும்.
மியூச்சுவல் ஃபண்டில் SWP-இன் பொதுவான உபயோகம்:
ஈக்விட்டி ஃபண்டுகள் மார்க்கெட்டில் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டாலும் நீண்ட கால வளர்ச்சிக்கு ஏற்றவை.
இதுவரையான தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், டெப்ட் ஃபண்டுகள் நிலையான ரிட்டர்ன்களை வழங்குகின்றன. இருந்தாலும் ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் கிடையாது, ஆகவே இது பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.
உங்கள் முதலீட்டை நீங்கள் விரைவில் காலியாக்கி எதிர்காலத் தேவைகளுக்குக் கொஞ்சமே மீதம் இருக்கும்படி ஆக்கிவிடலாம். ஆனால் SWP முறையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நீங்கள் ஒரு நிலையான தொகையையே பெறுவீர்கள், இதனால் மீதமிருக்கும் தொகைக்கு ரிட்டர்ன் கிடைத்துக்கொண்டே இருக்கும். இதனால் நீடித்து நிலைக்கும் நிதித் திட்டமிடலுக்கு இந்த முறை ஏற்றதாகிறது.
பொறுப்புதுறப்பு: பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.