எங்கள் பணத்தை டெப்ட் ஃபண்டுகள் எங்கே முதலீடு செய்கிறது?

டெப்ட்ஃபண்ட்கள், நமது பணத்தை எங்கு முதலீடு செய்கின்றன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

முதலீட்டாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நிதியை வங்கிகள், PSUகள், PFIகள் (பொது நிதி நிறுவனங்கள்), கார்ப்பரேட்கள் மற்றும் அரசாங்கம் போன்றவற்றின் மூலம் வழங்கப்படும் பாண்டுகளில் டெப்ட்ஃபண்ட்கள் முதலீடு செய்திடும்.இந்த பாண்டுகள் வழக்கமாக நடுத்தரம் முதல் நீண்ட அளவிலான முதலீட்டுக் கால அளவைக் கொண்டிருக்கும்.மியூச்சுவல் ஃபண்ட்கள், இதுபோன்ற பாண்டுகளில் முதலீடு செய்யும் போது, இந்த பாண்டுகளில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியைப் பெற்றிடும். காலப்போக்கில் ஃபண்டின் மொத்த ரிட்டனுக்கு இந்த வட்டித்தொகை பங்களித்திடும்.

சில டெப்ட்ஃபண்ட்கள், அரசாங்கத்தால் வழங்கப்படும் டிரஷரி பில்கள், வர்த்தகப் பத்திரங்கள், வைப்புச் சான்றிதழ்கள், வங்கியாளர் ஏற்பு, பில்ஸ் ஆஃப் எக்ஸ்சேஞ்ச் போன்ற குறுகிய கால முதலீடுகளைக் கொண்ட பணச்சந்தை சார்ந்த பத்திரங்களிலும்கூட முதலீடு செய்கின்றன.காலப்போக்கில் ஃபண்டின் ஒட்டுமொத்த ரிட்டர்னுக்கு பங்களிக்கக்கூடிய வட்டியை , வழக்கமான இடைவெளியில், நிலையான வட்டியாக வழங்குவதையும் இந்தப் பத்திரங்கள் உறுதிசெய்திடும்.

எதிர்காலத்தில் வழக்கமான வட்டித் தொகையை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை பாண்டுகளும், பணச் சந்தை சார்ந்த பத்திரங்களும் வழங்கினாலும் கூட, நிதியியல் நெருக்கடி போன்ற குறிப்பிட்ட சில சூழல்களில் இந்த உறுதிப்பாட்டை அவற்றால் நிறைவேற்ற முடியாமல் போகலாம்.ஆகையால், ஈக்விட்டி ஃபண்ட்களை விட, டெப்ட் ஃபண்ட்கள் அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக இருக்கின்றன. அதேசமயத்தில், ஃபண்டின் ஒட்டுமொத்த ரிட்டர்னில் ஒரு கணிசமான பகுதியை அதன் வழங்குனர்களால் வழங்க முடியாமல் போகக்கூடும் என்பதால், இந்த ஃபண்ட்கள் தொடர்பாக சில ரிஸ்க்குகள் இருக்கவே செய்கின்றன.

 

398
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்