நீண்டகாலத்திற்குச் சொத்து உருவாக்குவதற்கு என குறிப்பிட்ட ஃபண்டுகள் இருக்கின்றனவா?

நீண்டகாலத்தில் நல்ல செல்வத்தை உருவாக்கித் தரும் ஏதேனும் குறிப்பான ஃபண்ட்ஸ் ஏதும் உள்ளதா? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

செல்வம் என்றால் என்ன? அது என்ன நோக்கத்திற்குப் பயன்படுகிறது?

பலரும் இந்தக் கேள்விகளுக்கு, “தங்களின் கனவுகளுக்கு ஏற்ப வாழலாம்”, அல்லது “பணம் பற்றிக் கவலையின்றி வாழலாம்”, அல்லது “நிதிச் சுதந்திரத்துடன் இருக்கலாம்” என்று பதிலளித்திடுவர். செல்வ செழிப்புடன் இருப்பது என்பது, ஒருவர் தனது பொறுப்புகள் மற்றும் கனவுகளுக்குச் செலவிடுவதற்கான போதுமான தொகையை வைத்திருப்பது ஆகும்.

எனினும், எல்லா நீண்டகாலச் செலவுகளிலும், முக்கியமான காரணியான “பணவீக்கத்தை” ஒருவர் மறந்துவிடக் கூடாது. பணவீக்கம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல, நீங்கள் உங்கள் வாழ்க்கை இலக்கைப் பூர்த்தி செய்யும் சமயம் வரும்போது உங்களுக்கு ஏற்படக்கூடிய செலவு அதிகரிப்பு நிகழ்வே பணவீக்கம் எனப்படும்.

பரவலாக முதலீடு செய்யப்படும் நிதிகள், நியாயமான அளவிலான அபாயத்துடன் நீண்டகாலத்தில் செல்வத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கிடும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களைக்  கொண்டு ஈக்விட்டிகளுடன் தொடர்புடைய அபாயமானது மூன்று காரணிகள் கொண்டு கட்டுப்படுத்தப்படுகிறது.

  • ஃபண்டை நிர்வகிக்கும் தொழில்முறை ஃபண்ட் மேனேஜரின் நிபுணத்துவம்
  • பரவலான செக்யூரிட்டிகளில்  முதலீடு செய்யப்படுவதால் அபாயங்களைப் பரவலாக்குதல்
  • குறுகிய கால ஏற்ற இறக்கங்களைக் குறைத்திடும் நீண்டகால முதலீட்டைச் செய்தல்;

முதலீட்டாளர்களுக்கு செல்வத்தை உருவாக்கிடும் வாய்ப்பை வழங்கக்கூடிய ஒரு சொத்து வகையாக ஈக்விட்டிகள் கருதப்படுவது உண்மை என்றாலும், அவை குறுகிய கால அளவில் ஏற்ற இறக்கத்தை சந்தித்திடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியதும் முக்கியமானது. எனவே, நீங்கள் நீண்டகாலத்துக்கு முதலீடு செய்யவேண்டும்.

346
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்