மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வுசெய்வது குழப்பமாக இருக்கிறதா?

மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது மிகவும் குழப்பமாக இருக்கிறதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஆம், பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன ஈக்விட்டி, டெப்ட், மணி மார்க்கெட், ஹைபிரிட் போன்றவை. மேலும் நூற்றுக்கணக்கான திட்டங்களை நிர்வகிக்கின்ற பல மியூச்சுவல் ஃபண்ட்கள் இந்தியாவில் உள்ளன. எனவே, ஒரு குறிப்பிட்ட திட்டத்தை முடிவு செய்வது பலருக்கும் சிக்கலானதாகவும், குழப்பமானதாகவும் இருக்கலாம்.

முதலீடு செய்வதற்கான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது முதலீட்டாளரின் மனதில் கடைசி விஷயமாக இருக்க வேண்டும். அதற்கு முன்பு, இதுபோன்ற குழப்பத்தை பின்னர் தெளிவுபடுத்த உதவுகின்ற பல முக்கியமான படிகள் உள்ளன.

ஓய்வுத் திட்டமிடல் அல்லது வீட்டைப் புனரமைத்தல் போன்ற ஏதாவது ஒரு முதலீட்டு நோக்கம் முதலீட்டாளருக்கு இருக்க வேண்டும். எவ்வளவு ரிஸ்க்கை எடுக்கலாம் என்பது குறித்து அறிகின்ற அதேசமயத்தில், இதற்கு எவ்வளவு பணம் தேவை மற்றும் எவ்வளவு காலம் எடுக்கும் என்ற இரண்டு முடிவுகளை முதலீட்டாளர் செய்யவேண்டும்.

வேறு விதமாகக் கூறவேண்டுமானால், முதலீட்டாளரின் இலக்குகள், நோக்கங்கள் மற்றும் ரிஸ்க் புரொபைலின் அடிப்படையில்தான், ஈக்விட்டி அல்லது ஹைபிரிட் அல்லது டெப்ட் ஃபண்டா என்று ஃபண்ட்டின் வகை பரிந்துரைக்கப்படும். அதன்பின்னர், திட்டத்தின் இதுவரையிலான செயல்திறன், போர்ட்ஃபோலியோ பொருத்தம் போன்றவற்றின் அடிப்படையில் மிகவும் குறிப்பான திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், தொடக்கத்திலேயே முதலீட்டு நோக்கம் குறித்து தெளிவாக இருக்கும் பட்சத்தில், முடிவில் எந்த ஃபண்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்த குழப்பம் அதிகம் இருக்காது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்