எனக்கு ஏற்ற ஃபண்டை எப்படித் தெரிந்துகொள்வது?

எந்த ஃபண்ட் எனக்கு பொருத்தமானது என்பதை எப்படி அறிவது?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யவேண்டும் என்று ஒரு முதலீட்டாளர் முடிவுசெய்த பின்னர், நிலையான வருவாய் திட்டம், ஈக்விட்டி அல்லது பேலன்ஸ்டு திட்டம் போன்றவற்றில் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும் என்பதையும், எந்தச் சொத்து மேலாண்மை நிறுவனத்தில் (AMC) முதலீடு செய்யவேண்டும் என்பதையும் அவர் தீர்மானிக்க வேண்டும்;

முதலில், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்/முதலீட்டு ஆலோசகருடன் உங்கள் நோக்கம் என்ன, எவ்வளவு காலம் முதலீடு செய்வது உங்களுக்கு வசதியாக இருக்கும், உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்க வேண்டும்.

இந்த விவரங்களின் அடிப்படையில் எந்த ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம் என்பது தீர்மானிக்கப்படும்.

  1. உங்களுக்கு ஓய்வுத் திட்டமிடல் போன்ற ஒரு நீண்டகால நோக்கம் இருந்து, ஓரளவு ரிஸ்க் எடுப்பது சரியாக வரும் என்று வைத்துக்கொள்வோம். இந்தச் சூழலில் ஈக்விட்டி அல்லது பேலன்ஸ்டு ஃபண்ட் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
  2. பணத்தை ஒருசில மாதங்களுக்கு மட்டுமே முதலீடு செய்வது போன்ற குறுகியகால நோக்கம் உங்களுக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தச் சூழலில், லிக்விட் ஃபண்ட் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
  3. ஒருவேளை நீங்கள் வழக்கமான முறையில் வருமானம் தரக்கூடிய ஒன்றில் முதலீடு செய்ய விரும்பினால், மாதாந்திர வருவாய்த் திட்டம் அல்லது இன்கம் ஃபண்ட் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

என்ன வகையான ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும் என்பதைத் தீர்மானித்த பின்னர், AMC -இலிருந்து ஒரு குறிப்பிட்ட திட்டம் முடிவு செய்யப்படும். வழக்கமாக AMC -யின் கடந்தகால செயல்திறன், திட்டத்தின் பொருந்தும் தன்மை, போர்ட்ஃபோலியோ விவரங்கள் ஆகியவற்றைத் தீர்மானித்த பின்னர் இந்த முடிவுகள் செய்யப்படும் .

முதலீட்டைச் செய்வதற்கு முன்பு, திட்ட தகவல் அறிக்கை மற்றும் முக்கியத் தகவல் ஆவணம் ஆகிய இரண்டு ஆவணங்களையும் முதலீட்டாளர்கள் படிக்க வேண்டியது அவசியமானது. விரிவான தகவலை ஒருவர் அறிய விரும்புகின்ற பட்சத்தில், திட்டத் தகவல் ஆவணத்தைப் பார்க்கலாம். இந்த அனைத்துமே எல்லா மியூச்சுவல் ஃபண்ட் இணையதளங்களிலும் கிடைக்கின்றன.

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்