இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் எப்படிப் பலதரப்பட்ட மக்களால் ஏற்கப்படுகிறது?

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்ஸை எந்த அளவு பரவலாக ஏற்றுக்கொள்கின்றனர்? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

1964 ஆம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தொடங்கப்பட்ட பின்பு இதுவரை சுமார் 17.37 இலட்சம் கோடி (ஜன 31, 2017 -இன்படி) அளவில் சொத்துக்களை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இந்தியாவின் வலுவான பொருளாதாரம், சிறந்த ஒழுங்குமுறை, பிரபல நிறுவனங்கள் மற்றும் அந்நிய சொத்து மேலாளர்களின் கால்பதிப்பு மற்றும் இந்திய முதலீட்டாளர்களின் மத்தியில் விருப்பமான சொத்து வகையாக மியூச்சுவல் ஃபண்ட்களை ஏற்றுக்கொள்வதிலான அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இதன் வளர்ச்சி அளப்பரியதாக உள்ளது.

தனி முதலீட்டாளரின் சராசரி முதலீடாக ₹ 68,086 உள்ளது என்பதை அறியும்போது, இந்திய நடுத்தரக் குடும்பங்களால் இந்த முதலீட்டு வகை ஏற்கப்பட்டு வருவது தெளிவாகிறது.

இந்தியாவில் தற்போது 42 சொத்து மேலாண்மை நிறுவனங்கள் (AMC) உள்ளன. இவை மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் நிதித் திட்டமிடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அவை குறித்த தகவலைப் பரப்புவதிலும் உதவுகின்றன.

சிஸ்டமேட்டிக் முதலீட்டுத் திட்டங்களின் மூலம், இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 4000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இது, இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மீதான நம்பிக்கைக்கும், பிரபலத்தன்மைக்கும் ஓர் அடையாளமாக உள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்ஸின் 83% முதலீடுகள், இந்தியாவில் முன்னணியிலுள்ள 15 நகரங்களில் உள்ள முதலீட்டாளர்களின் மூலம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் குறித்த விழிப்புணர்வையும், ஏற்புமையையும் விரிவுபடுத்தும் முயற்சிகளை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தொழில்துறை மேற்கொண்டு வருகிறது.

(அனைத்து தரவுகளும் இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கூட்டமைப்பின் மூலம் வழங்கப்பட்டவை).

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்