ELSS ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் நன்மைகள் என்னென்ன?

ELSS ஃபண்ட்களில் முதலீடு செய்வதில் உள்ள நன்மைகள் என்னென்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்கள் என்பவை ஈக்விட்டி-சார்ந்த வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்களாகும். இவை, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின்கீழ் வரி சேமிப்பை அளிப்பதோடு, ஈக்விட்டிகளின் வளர்ச்சி சாத்தியக்கூறையும் வழங்குகின்றன. இந்த இரண்டு நன்மைகளோடு, இவற்றின் லாக்-இன் காலம் குறைவு, 3 வருடங்கள்தான். வரி சேமிப்பு வகை ஸ்கீம்களில் கிடைக்கின்ற மிகக் குறைவான லாக்-இன் காலம் இதுவே. அதோடு, ELSS ஃபண்ட்கள் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களாக இருப்பதால் அவற்றுக்கே உரித்தான இன்னும் சில நன்மைகளையும் அளிக்கின்றன.

SIP, லம்ப்சம் இவை இரண்டில், உங்களுக்கு ஏற்ற முறையில் ELSS ஃபண்ட்களில் நீங்கள் முதலீடு செய்யலாம். சம்பளம் பெறுவோர், வருட இறுதியில் மொத்தமாக முதலீடு செய்வதைவிட, மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை வரி சேமிப்புக்காக ஒதுக்கி வைக்கவே விரும்புவார்கள் என்பதால், அவர்களுக்கு SIP முறை சிறந்தது. அவர்கள் பணியில் இருக்கும் காலம் வரை, ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து SIPகளில் முதலீடு செய்துகொண்டே இருக்கலாம்.

3 வருட லாக்-இன் காலம் கட்டாயம், ஆனால் லாக்-இன் காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். ஆனால் வரி சேமிப்புக்கான பிற ஸ்கீம்களில் லாக்-இன் காலம் முடிந்ததும் உங்கள் பணம் தானாக முதிர்வடைந்துவிடும் அல்லது வட்டியாகக் கிடைக்கும் லாபம் அதன் பிறகு வராமல் நின்றுவிடும். முதலீட்டாளர் விரும்பும் காலம் வரை தொடர்ந்து முதலீடு செய்து வைத்தபடியே இருக்கலாம், எந்த அளவு நீண்ட காலம் முதலீட்டை வைத்துள்ளாரோ அந்த அளவுக்கு முதலீட்டு ரிஸ்க் குறையும். அதோடு காலம் அதிகரிக்க அதிகரிக்க அதிக ரிட்டர்ன் பெறும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
 

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்