வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளில் (ELSS) யார் முதலீடு செய்ய வேண்டும்?

வரி சேமிப்பிற்கான மியூச்சுவல் ஃபண்ட்களில் யார் முதலீடு செய்ய வேண்டும்? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

வரி சேமிக்கும் மியூச்சுவல் ஃபண்ட்கள் அல்லது ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம்கள் என்பவை, வருமானவரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு அனுகூலங்களை வழங்குகின்ற டைவர்சிஃபை செய்யப்படும் ஈக்விட்டி ஃபண்ட்களாகும். ஆகவே, ஈக்விட்டி சார்ந்த வரி சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யும் ரிஸ்க் எடுக்க விருப்பமுள்ள வரி செலுத்துநர்களுக்கு ELSS ஃபண்ட்கள் மிகவும் ஏற்றவை. சம்பளம் பெறும் நபர்களுக்கு ELSS ஃபண்ட்கள் ஏற்றவை. ஏனெனில் அவர்களுக்கு நிரந்தர வருவாய் உள்ளது, அதோடு ஒவ்வொரு வருடமும் அவர்கள்  வரி சேமிப்பிற்கான முதலீட்டுத் திட்டங்களை  விரும்புவார்கள். சொல்லப்போனால், அவர்கள் SIP வழியாக ELSS-இல் மாதாமாதம் முதலீடு எளிதாக செய்யலாம். அது ருப்பீ-காஸ்ட் ஏவரேஜிங் காரணமாக நன்மையளிக்கும்.

நீங்கள் இளம் வயது வரி செலுத்துநர் எனில், ELSS-இல் முதலீடு செய்து இரட்டை அனுகூலத்தை அடைய விரும்பினால், அதாவது. ELSS-இல் ஒவ்வொரு வருடமும் முதலீடு செய்வதன் மூலம் 80C பிரிவின்கீழ் வரிவிலக்கும், நீண்ட கால அளவில் கணிசமான நிதி வளப் பெருக்கமும் பெறலாம். வயது அதிகமுள்ள வரி செலுத்துநர்களும் கூட ELSS-இல் முதலீடு செய்து வரி சேமிப்புகளைப் பெறலாம், ஆனால் ELSS-இல் உள்ள ஈக்விட்டி ரிஸ்க் காரணமாக முதலீட்டுக் காலம் நீண்டதாக இருக்க வேண்டும். அது அவர்களுக்குக் கடினமாக இருக்கும்.

ELSS ஃபண்ட்களின் லாக்-இன் காலம் 3 வருடங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். லம்ப்சம் முதலீடாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் இன்று முதலீடு செய்தால்  3 வருடங்கள் கழித்தே நீங்கள் பணத்தை எடுக்க முடியும். ஒவ்வொரு SIP பேமெண்ட்டுக்கும் லாக்-இன் காலம் பொருந்தும். 12 மாதங்களும் முதலீடு செய்த மொத்தத் தொகையையும் வித்ட்ரா செய்ய விரும்பினால், கடைசி SIP தவணை 3 வருடங்களை நிறைவு செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், லாக்-இன் காலம் வரை முதலீடு செய்த தொகையை அப்படியே வைத்திருப்பது ஒன்றும் பெரிதல்ல, அதன் பிறகும் தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் ELSS ஃபண்ட்களில் கிடைக்கும் உண்மையான நிதிப் பெருக்க ஆதாயங்களைப் பெற முடியும்.

இளம் வயது வரி செலுத்துநருக்கு இன்னும் பணிக்காலம் பல வருடங்கள் இருக்கும் என்பதால், பணி ஓய்வை நெருங்கும் நபர்களுடன் ஒப்பிடுகையில் ELSS ஃபண்ட்களில் கிடைக்கும் இரட்டை அனுகூலங்களை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், இன்னும் 5-7 வருடங்களில் பணி ஒய்வு பெறப்போகும் நபர்களோ, அதற்கேற்ப ரிஸ்க் தயார்நிலை கொண்டிருந்தால் ELSS ஃபண்ட்களில் முதலீடு செய்யத் தேர்வு செய்யலாம். ஆகவே உங்கள் வயது, ரிஸ்க் குறித்த விருப்பத் தேர்வுகள், வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து, வயது அதிகமான நபர்களுக்கான வரிப் பிரிவே மிகவும் ஏற்றதாக இருக்கும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்