மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும் வரிக்கணக்கிடல் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் என்னென்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் வரி விதிகள் மற்றும் தாக்கங்கள் என்னென்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலதன இலாபங்கள் வரிக்கு உட்பட்டவை. அது நமது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகளை (யூனிட்கள்) பணமாக்கும் போது/ விற்கும்போது நாம் பெறுகின்ற இலாபத்தின் மீது செலுத்தப்படுகிறது. இலாபம் என்பது விற்பனை தேதி மற்றும் வாங்கிய தேதியிலான திட்டத்தின் NAV மதிப்புக்கு இடையேயான வேறுபாட்டைக் குறிக்கிறது (விற்பனை விலை - வாங்கிய விலை). முதலீட்டைத் தக்க வைக்கும் காலத்தைப் பொறுத்து மூலதன இலாபங்கள் வரி மேலும் வகைப்படுத்தப்படுகிறது. ஈக்விட்டி ஃபண்ட்களுக்கு (ஈக்விட்டி வெளிப்பாடு > =65% கொண்ட பங்குகள்), ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் முதலீட்டைத் தக்கவைப்பது நீண்டகாலம் என்று கருதப்படுகிறது மற்றும் இது நீண்டகால மூலதன இலாபங்கள் (LTCG) வரிக்கு உட்பட்டது.

ஒரு நிதியாண்டிலான ஒட்டுமொத்த மூலதன இலாபம் ரூ 1 இலட்சத்தை விட அதிகமானால், ஈக்விட்டி ஃபண்ட்களின் மீது 10% அளவு LTCG வரி பொருந்தக்கூடும். நிதித் திட்டமிடலைச் செய்யும் போது, ரூ 1 இலட்சம் வரையிலான உங்கள் இலாபத்துக்கு வரி ஏதும் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும். இது 31 ஜனவரி 2018 -க்குப் பின்பு செய்யப்பட்ட அனைத்து முதலீடுகளுக்கும் பொருந்தக்கூடியது. ஈக்விட்டி ஃபண்டிலான ஒரு வருடத்துக்கும் குறைவான முதலீடுகளில் இருந்து பெறப்படும் இலாபத்தின் மீது 15% குறுகியகால மூலதன இலாபங்கள் (STCG) பொருந்தும்.

ஈக்விட்டி அல்லாத ஃபண்டாக (டெப்ட் ஃபண்ட்) இருக்கும் பட்சத்தில், 3 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் முதலீட்டைத் தக்கவைப்பது நீண்டகாலம் என்று வரையறுக்கப்படுகிறது மற்றும் விலைக் குறியீட்டுடன் இணைக்கப்பட்ட இத்தகைய முதலீட்டுத் தக்கவைப்புகளின் மீது 20% LTCG வரி பொருந்தக்கூடும். அதாவது, மூலதன இலாபங்களைக் கணக்கிடும்போது, பணவீக்கத்துக்கு ஏற்ப வாங்கப்பட்ட விலைகள் சரிசெய்யப்படும். 3 வருடங்களுக்கும் குறைவாகத் தக்கவைக்கப்படும் முதலீடுகளில் இருந்து பெறப்படும் இலாபங்கள் STCG வரிக்கு உட்பட்டவை. இது தனிநபர்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச வருமான வரி நிலை ஆகும்.

350
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்