டிவிடென்ட் டிஸ்ட்ரிப்யூஷன் வரி என்றால் என்ன?

டிவிடென்ட் டிஸ்ட்ரிப்யூஷன் வரி என்றால் என்ன?
கால்குலேட்டர்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருந்து பெறப்படும் டிவிடென்ட்களின் மீது வரி எதுவும் விதிக்கப்படாது என்றாலும், அவற்றின் மீது டிவிடென்ட் விநியோக வரி (DDT) விதிக்கப்படும். திட்டத்தின் மூலம் வழங்கப்படக்கூடிய DDT, முதலீட்டாளர்களுக்கான விநியோகிக்கத்தக்க உபரியின் அளவைக் குறைத்திடும். தற்போது ஈக்விட்டி சார்ந்த திட்டங்கள் (65% -க்கு அதிகமாக ஈக்விட்டிகளில் ஒதுக்கீடு கொண்ட திட்டங்கள்) 10% DDT -க்கு உட்பட்டவை. அதனுடன் 12% கூடுதல் கட்டணமும், 4% செஸ் வரியும் விதிக்கப்படும். இவற்றின் விளைவாக 11.648% DDT வரி, இந்தியர்கள், NRI அல்லது உள்நாட்டு நிறுவனங்கள் போன்ற அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் விதிக்கப்படும். ஈக்விட்டி சாராத திட்டங்கள் 25% DDT வரிக்கு உட்பட்டவை மற்றும் அதனுடன் 12% கூடுதல் கட்டணமும், 4% செஸ் வரியும் விதிக்கப்படும். இவற்றின் விளைவாக 29.12% DDT வரி, இந்தியர்கள் மற்றும் NRI களுக்கு விதிக்கப்படும்.

உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யக் கூடிய இன்ஃப்ராஸ்டிரக்ச்சர் டெப்ட் ஃபண்ட்ஸில் இந்தியர்களுக்கு 25% DDT வரியும், NRI களுக்கு 5% DDT வரியும் விதிக்கப்படும். விளைவாக முறையே 29.12% மற்றும் 5.824% DDT வரி விதிக்கப்படும்.

திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் இலாபத்திலிருந்து டிவிடென்ட்கள் விநியோகிக்கப்படுவதால், அதிக DDT காரணமாக முதலீட்டாளர்களுக்கு கிடைக்கக் கூடிய வரிக்குப் பிந்தைய டிவிடென்ட்டின் மதிப்பு குறைந்திடும். உங்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகளில் இருந்து டிவிடென்ட்களை வருவாய் ஆதாரமாகக் கருதாத பட்சத்தில், குரோத் ஆப்ஷனை நீங்கள் தேர்ந்தெடுப்பது சிறந்தது. வழக்கமான பணப் பாய்வை விரும்பினால், சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் (SWP) சிறந்தது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்