மியூச்சுவல் ஃபண்டு டிவிடென்ட் என்றால் என்ன?

டிவிடென்ட் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

டிவிடென்ட் என்பது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்கில் இருந்து வரும் வருமானத்தின் பங்கீடு ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகளின் விற்பனையின் மூலம் இலாபங்கள் பெறப்படும் போது டிவிடென்ட்கள் விநியோகிக்கப்படும்.

ஒழுங்குமுறையின்படி, போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகளின் விற்பனையில் இருந்து இலாபங்களைப் பெறும் பட்சத்தில் ஒரு ஃபண்ட் அதிலிருந்து டிவிடென்ட்களை அறிவிக்க முடியும் அல்லது நடப்பு வருமானத்தை வட்டி அல்லது டிவிடென்ட்களின் வடிவில் அறிவிக்க முடியும். இத்தகைய இலாபங்கள் டிவிடென்ட் ஈக்வலைசேஷன் ரிசர்வுக்கு பரிமாற்றப்பட்டு, அறங்காவலர்கள் வாரியத்தின் சுயதீர்மானத்தின் பேரில் அறிவிக்கப்படும்.

டிவிடென்ட்கள் ஸ்கீமின் ஃபேஸ் வேல்யூவின் (FV) சதவீதமாக அறிவிக்கப்படுகின்றன, NAV-இன் சதவீதமாக அல்ல. ஒரு யூனிட்டின் FV ரூ. 10 மற்றும் டிவிடென்ட் விகிதம் 20% எனில், டிவிடென்ட் பெறத் தேர்வு செய்திருந்த முதலீட்டாளர் ஒவ்வொருவரும் டிவிடென்டாக ரூ.2 பெறுவார்கள். எனினும், டிவிடென்ட் அறிவிக்கப்பட்ட பிறகு அதற்கு சமமான அளவிற்கு ஸ்கீமின் NAV குறையும். குரோத் ஆப்ஷனில் உள்ள முதலீட்டாளர்களுக்கு டிவிடென்ட் கிடைக்காது, அவர்களுக்கு ஸ்கீமில் இருந்து கிடைக்கும் லாபத் தொகையானது மீண்டும் ஸ்கீமில் முதலீடு செய்யப்படும். ஆகவே, டிவிடென்ட் பெறத் தேர்வுசெய்தவர்களுக்கு நடப்பதற்கு நேரெதிராக, குரோத் முறை முதலீடு செய்தவர்களுக்கு NAV அதிகரிக்கிறது.

ஏப்ரல் 01, 2020 முதல், மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் டிவிடென்ட் தொகைகள் முதலீட்டாளர்களின் தரப்பில்  வரி செலுத்தவேண்டிய வருமானமாகக் கருதப்படுகிறது. இப்போது, டிவிடென்ட் பே-அவுட் பெறத் தேர்வு செய்யும் முதலீட்டாளர்கள் ஒரு நிதியாண்டில் பெறக்கூடிய எந்த ஒரு டிவிடென்ட் வருமானத்திற்கும், அவர்களுக்குப் பொருந்தக்கூடிய அதிகபட்ச வரி வரம்புக்கு ஏற்ப வருமானவரி செலுத்த வேண்டும். டிவிடென்ட் தொகையை மறுமுதலீடு செய்யத் தேர்வு செய்யும் முதலீட்டாளர்கள் பெறும் லாபம் முழுதும் கூடுதல் யூனிட்டுகளாக அவர்களது போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்படும் என்பதால், வரி செலுத்துவதில் இவர்களுக்குத் தாக்கம் எதுவும் இருக்காது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்