ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங் என்பது என்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நகரத்திற்குள் நீங்கள் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, காலியான சாலையில் செல்லும்போது மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்வீர்கள், போக்குவரத்து நெரிசலோ வேகத் தடையோ உள்ள மற்ற இடங்களில் மணிக்கு 20கி.மீ. வேகத்திற்கு நீங்கள் குறைக்க வேண்டியிருக்கும். இறுதியாக, நீங்கள் எவ்வளவு அடிக்கடி வேகத்தைக் குறைப்பீர்கள் அல்லது வேகமெடுப்பீர்கள் என்பதைப் பொறுத்து சராசரியாக மணிக்கு 45 கிமீ. அல்லது 55 கி.மீ. வேகத்தில் முடிவடையும்.

நகரத்திற்குள் வாகனம் ஓட்டும்போது உங்கள் சராசரி வேகம் மிக அதிகமாகவும் இல்லை, மிகக் குறைவாகவும் இல்லை. அதுபோலவே, SIPகளின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது மார்க்கெட்டின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் சுமூகமாகச் செல்ல முடியும். மார்க்கெட் எப்போது எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆகவே, ஒருவர் தனது முதலீடுகளை வாங்கவோ விற்கவோ ஏற்றபடி மார்க்கெட் எப்போது ஏறும் அல்லது இறங்கும் என்ற நேரத்தைத் துல்லியமாகக் கணித்துச் செயல்பட முடியாது. இப்படியான சூழலில், சீரான முறையில் முதலீடு செய்யும் முறையானது மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் தாக்கத்தை சிறந்த முறையில் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும்.

முன்பே தீர்மானிக்கப்பட்ட தேதியில், நீண்ட காலம் வரை, மாதந்தோறும் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்யும்போது, மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களால் உங்கள் முதலீடுகளுக்கு ஏற்படும் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஏனெனில், மார்க்கெட் இறங்கும்போது அந்தத் தொகைக்கு நீங்கள் அதிக யூனிட்டுகளை வாங்குவீர்கள், மார்க்கெட் ஏறும்போது அதே தொகைக்கு குறைவான யூனிட்டுகளையே வாங்குவீர்கள். இதனால், இந்தக் கால அளவில் மார்க்கெட் ஏறினாலும் இறங்கினாலும் உங்களிடம் இருக்கும் மொத்த யூனிட்டுகளின் சராசரி யூனிட் விலை மதிப்பானது நீண்ட காலவாக்கில் குறையும். SIPகளில் ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங் என்ற உத்தியின் சாராம்சம் இதுதான்.

நீண்ட கால அளவில் (உ.ம். ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள்) SIPகளில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், மார்க்கெட் ஏறினால், பெருவாரியான NAV மதிப்பைவிட உங்கள் யூனிட்டுகளின் சராசரி விலை மதிப்பானது குறைவாக இருக்கும்.

கூட்டு வட்டியின் மூலம் கிடைக்கும் பலன்கள் மட்டுமின்றி, இந்த ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங் மூலமும் SIP முதலீடுகள் உங்களுக்கு மேலும் பலன்களை அளிக்கின்றன. நீண்ட காலம் முதலீடு செய்து வைக்கும்போது, உங்கள் முதலீடுகள் மேலும் மேலும் பெருக அதிக காலம் கிடைப்பதால், நீண்ட கால முதலீடுகளில் கூட்டு வட்டியின் சக்தியும் சிறப்பான பலன்களை அளிக்கிறது. அதோடு அதிகத் தொகையை முதலீடு செய்யாமலே உங்கள் வளத்தைப் பெருக்கவும் உதவுகிறது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்