மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைப் பற்றி ஏன் கவலைப்படக்கூடாது?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நீண்ட சாலைப் பயணம் செல்லும்போது, உங்கள் வேகம் குறித்து கவலைப்படுவீர்களா? அல்லது இலக்கு குறித்தும் அதை எப்படி அடைவது என்றும் கவலைப்படுவீர்களா? கண்டிப்பாக, சாலையில் இருக்கும் சிறு சிறு மேடுபள்ளங்கள் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள், சரியான நேரத்திற்குள் பாதுகாப்பாக உங்கள் இலக்கை அடைவது பற்றித்தான் சிந்திப்பீர்கள் அல்லவா! மியூச்சுவல் ஃபண்ட்களிலும் அப்படித்தான். தினசரி NAV ஏற்ற இறக்கங்கள் பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் தீர்மானித்துள்ள கால வரம்புக்குள் உங்கள் நிதி இலக்குக்கு அருகே உங்களை அது அழைத்துச் செல்கிறதா என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

சாலைப் பயணத்தில், பல முறை உங்கள் வேகம் பூச்சியத்திற்கு அருகே வந்துவிடும், ஆனால் மேடு பள்ளத்தைக் கடந்தவுடன் மீண்டும் உங்கள் வாகனம் வேகமெடுத்துப் பாயும், பயணம் தொடரும் அல்லவா! பயணத்தின் முடிவில், இலக்கை அடைய நீங்கள் சராசரியாக எவ்வளவு வேகத்தில் வந்தீர்கள் என்பதே முக்கியமாகும். அதேபோல், குறுகிய காலத்தில் பார்க்கையில் மியூச்சுவல் ஃபண்ட்களிலும் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் நீண்ட கால அளவுக்கு நீங்கள் முதலீடு செய்து வைக்கும்போது இந்த ஏற்ற இறக்கங்களினால் ஏற்படும் தாக்கம் குறையும். நல்ல ரிட்டர்ன் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். நீண்ட பயணத்தில் உங்கள் வாகனத்தின் சராசரி வேகம் அதிகமாக இருக்குமல்லவா... அது போலவே! 

எல்லா பொருளாதாரங்களும், வளர்ச்சி நிலைக்கும் வீழ்ச்சி நிலைக்கும் செல்லும், அதைச் சார்ந்து சந்தையும் ஏற்ற இறக்கத்தை அடையும், அது உங்கள் ஃபண்டின் ரிட்டர்னை பாதிக்கலாம், ஆனால் அது குறுகியகாலம் மட்டுமே இருக்கும். நீண்ட காலத்தில் பார்க்கும்போது, அதுபோன்ற எண்ணற்ற ஏற்ற இறக்கங்களையும் உங்கள் ஃபண்ட் கண்டிருக்கும், ஆனால் நீண்ட காலத்தில் கூட்டு வட்டி முறையில் அது பெறும் மொத்த ரிட்டர்ன் காரணமாக இந்த சிறுசிறு ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் தாக்கங்கள் இல்லாமல் போகும். முதலீட்டுப் பயணத்தின் முடிவில் இந்த மொத்த ரிட்டர்ன்தான் முக்கியம்!

343
478
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்