மியூச்சுவல் ஃபண்டுகள் ரிஸ்கை டைவர்சிஃபை செய்தாலும் ஏன் அவை ரிஸ்க் என நம்பப்படுகிறது?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்கள் ஈக்விட்டி அல்லது டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்கின்றன. இவற்றின் மதிப்புகள் மார்க்கெட்டின் நகர்வுக்கு ஏற்ப ஏறி இறங்கக் கூடியவையாகும். ஃபண்டின் NAV மதிப்பானது அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள தனித்தனி செக்யூரிட்டிகளைப் பொறுத்தது என்பதால் இவை ரிஸ்க் உள்ளவையாகின்றன. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதால், அவை இந்த மார்க்கெட் ரிஸ்க்கை டைவர்சிஃபை செய்கின்றன. ஃபண்ட் பல செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதால், ஒரே நாளில் அவை அனைத்தின் மதிப்பும் வீழ்ச்சி அடையும் எனும் ரிஸ்க் குறைக்கப்படுகிறது. இப்படியாக, மியூச்சுவல் ஃபண்ட்கள் ரிஸ்க்கை டைவர்சிஃபை செய்கின்றன என்பது உண்மைதான். ஆனால் ரிஸ்க்கே இல்லாமல் செய்வதாகக் கருத முடியாது. ஃபண்ட் மேனேஜர் செய்யும் டைவர்சிஃபிகேஷன் செயலானது, ஃபண்டின் மார்க்கெட் ரிஸ்க்கை டைவர்சிஃபிகேஷனுக்கு ஏற்ப ஓரளவுக்குக் குறைக்கிறது. எவ்வளவு டைவர்சிஃபிகேஷன் செய்யப்படுகிறதோ, அந்த அளவு ரிஸ்க் குறைகிறது. 

தீமாட்டிக் அல்லது செக்டார் ஃபண்ட்கள் போன்ற செறிவான ஃபண்ட்கள் ரிஸ்க் அதிகமானவை. ஏனெனில், மார்க்கெட்டில் ஏதேனும் சாதகமற்ற சூழல் ஏற்பட்டால் அது பாதிக்கப்பட்ட அந்தத் துறையில் உள்ள எல்லா நிறுவனங்களையும் ஏதோ ஒரு வழியில் பாதிக்கும், அல்லது மல்ட்டி கேப் ஃபண்டில் பல பிரிவுகளில் டைவர்சிஃபிகேஷன் செய்வதால், ஃபண்டின் NAV மதிப்பிற்கு சாதகமல்லாத சூழ்நிலை ஏற்படும்போது, விபத்தின்போது காரின் ஏர்பேக் வேலை செய்வது போன்று அது காக்கிறது.

நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது ஃபண்டின் செக்டார் அலொகேஷனில் டைவர்சிஃபிகேஷன் எவ்வளவு உள்ளது என்று பார்க்க வேண்டும். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப, உங்களுக்குப் பொருத்தமான டைவர்சிஃபிகேஷன் அளவைக் கொண்டுள்ள ஃபண்டைத் தேர்வு செய்யுங்கள்.

343
478
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்