அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளும் ரிஸ்க் ஆனவையா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ரிஸ்க் நிறைந்ததா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நாம் செய்கின்ற எல்லா முதலீடுகளுமே ரிஸ்க் நிறைந்ததுதான். அவற்றின் இயல்பும் அளவும் மட்டுமே மாறுபடுகிறது. இதேதான் மியூச்சுவல் ஃபண்ட்டுக்கும் பொருந்தும்.

முதலீட்டின் மீதான வருவாயில் எல்லா மியூச்சுவல் ஃபண்ட்ஸுமே ஒரே ரிஸ்க்கை கொண்டிருப்பதில்லை.

நீண்டகால முதலீட்டின்போது, சிறந்த ரிட்டர்ன்களை வழங்கக்கூடிய ஒரு செல்வத்தை உருவாக்கும் திறன் ஈக்விட்டி திட்டங்களுக்கு உள்ளது. பணவீக்கம் என்பது ஒரு ரிஸ்க் ஆகும் இருப்பினும் இந்த பணவீக்கத்தைத் தோற்கடிக்கும் சிறந்த சொத்து வகையாக ஈக்விட்டிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, சில ரிஸ்க்குகளை எடுப்பதும் பலனளித்திடும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

அதே சமயத்தில், ஈக்விட்டி ஃபண்ட்ஸுடன் இருக்கக் கூடிய ரிஸ்குடன் ஒப்பிடும் போது, லிக்விட் ஃபண்ட்ஸ் கணிசமான அளவில் குறைந்த ரிஸ்க்கை கொண்டது. குறைந்த ரிஸ்க் எடுப்பதன் மூலம் மூலதனத்தைப் பாதுகாத்து, எடுக்கப்பட்ட ரிஸ்க்குகளுக்கு ஏற்ப ரிட்டர்ன்களை உருவாக்குவதில் லிக்விட் ஃபண்ட்ஸ் கவனம் செலுத்திடும் மேலும்;

ரிட்டர்னின் மீதான ரிஸ்க்கை மட்டுமே நீங்கள் கருதக்கூடாது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பிற ரிஸ்க்குகளும் உள்ளன - உதாரணத்திற்கு லிக்விடிட்டி ரிஸ்க். உங்கள் முதலீட்டை எவ்வாறு எளிதாக ரொக்கமாக மாற்றலாம் என்பதை லிக்விடிட்டி ரிட்டர்ன்ஸ் (பணப்புழக்க வருவாய்) அளவிடும். இந்த ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் குறைவானது.

முடிவாக, திட்டத்தை முறையாகப் புரிந்துகொண்டு மதிப்பிடுவதன் மூலமும், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் அல்லது ஒரு முதலீட்டு ஆலோசகரின் வழிகாட்டுதலைப் பெறுவதன் மூலமும் ரிஸ்க்கின் இயல்பையும், அளவையும் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்;

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்