₹ 500-ஐ வைத்து முதலீடு செய்ய முடியுமா, தொடர்ந்து அதிகமாகச் சேர்க்க முடியுமா?

₹500 தொகையில் முதலீட்டைத்தொடங்கி , அதனை என்னால் தொடர்ந்து செய்ய முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

செல்வத்தை உருவாக்குவதற்கான பிரபலமான முதலீட்டுக் கோட்பாடு என்பது ‘ஆரம்பக் கட்டத்திலேயே தொடங்குதல், வழக்கமாக முதலீடு செய்தல். நீண்டகாலத்துக்கு முதலீட்டைத் தக்கவைத்தல்’. ₹500 என்ற அளவிலான குறைந்த தொகையைக் கொண்டு கூட நீங்கள் முதலீடு செய்ய முடியும். என்றாலும், அந்த முதலீட்டை ஆரம்பக்கட்டத்திலேயே தொடங்க வேண்டியது அவசியமானது.

காலப்போக்கில், உங்கள் முதலீட்டுத் தொகையை அதிகப்பதற்குப் பல வழிகள் உள்ளன. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், ஒரே ஃபண்ட்/ கணக்கில் நீங்கள் கூடுதல் பர்சேஸ்களை செய்ய முடியும். பெரும்பாலான ஃபண்ட் ஹவுஸ்களில், ₹ 100 தொகையை கூட உங்களால் கூடுதலாக முதலீடு செய்ய முடியும் அல்லது பிற திட்டங்களில் இருந்து பணத்தைப் பரிமாற்றவோ அல்லது திட்டங்களை ஸ்விட்ச் செய்யவோ முடியும். நீங்கள் ஒரு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் (SIP) முதலீடு செய்யத் தொடங்கலாம். இதனை வங்கியில் செய்யப்படும் தொடர் வைப்பு போன்று, வழக்கமான முறையில் முதலீடு செய்ய முடியும். மேலும், வருடாவருடம் ஊதியம் அல்லது வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, படிப்படியாக ஒவ்வொரு வருடமும் SIP பங்களிப்பை அதிகரித்துக் கொள்ள பெரும்பாலான AMCகள் தங்களின் முதலீட்டாளர்களிடம் பரிந்துரைக்கின்றன.

இன்றைய பரபரப்பான உலகில், நெகிழ்தன்மை மற்றும் வசதியின் காரணமாக,மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் முதலீட்டுக்குச் சிறந்தவையாக உள்ளன.

347
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்