மியூச்சுவல் ஃபண்டில் நேரடியான மற்றும் வழக்கமான திட்டத்தை எப்படித் தேர்வுசெய்வது?

மியூச்சுவல் ஃபண்டில் டைரக்ட் பிளான், ரெகுலர் பிளான் இரண்டில் ஒன்றை  எப்படித் தேர்வு செய்வது? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

டிஸ்ட்ரிபியூட்டர் போன்ற இடைத்தரகர் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் முதலீடு செய்யும்போது, ஏதேனும் ஒரு ரெகுலர் பிளானில் தான் முதலீடு செய்யப்படும். இடைத்தரகர் மூலம் முதலீடு செய்வதில் சில நன்மைகள் உள்ளன. உங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால குறிக்கோள்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் டிஸ்ட்ரிபியூட்டர் உதவலாம். KYC போன்றவற்றை நிறைவு செய்வது, SIP/SWP/STP போன்றவற்றை அமைப்பது, நீங்கள் முதல் முறை முதலீட்டாளர் எனில், படிவத்தை நிரப்புவது போன்றவற்றுக்கும் உங்கள் டிஸ்ட்ரிபியூட்டர் உதவுவார். உங்கள் நிதி இலக்குகள் மாறும்போது அல்லது லாபத்தைப் பெறுவதற்காக அல்லது விரும்பும் அசட் அலlகேஷனை மெயின்டெய்ன் செய்வதற்காக உங்கள் போர்ட்ஃபோலியோவை ரீபேலன்ஸ் செய்ய வேண்டிய சூழ்நிலைகளில் உங்கள் போர்ட்ஃபோலியோவை அட்ஜஸ்ட் செய்வதிலும் உங்கள் டிஸ்ட்ரிபியூட்டர் உதவக்கூடும். உங்கள் போர்ட்ஃபோலியோ பற்றிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிப்பதிலும், முகவரி, நாமினி மாறும்போது உங்கள் தனிப்பட்ட விவரங்களை மாற்றுவது போன்ற சேவைகளையும் உங்கள் இடைத்தரகர் வழங்கலாம். 

எனினும், நீங்கள் ஃபினான்ஷியல் மார்கெட்கள் பற்றியும், பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள் பற்றியும், ஸ்கீம்களின் செயல்திறனை எப்படி ஒப்பிடுவது என்றும் நன்கு அறிந்தவர் எனில், முதலீட்டின் இலக்குகள், ரிஸ்க் ஃபேக்டர்கள், ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோ ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்பவர் எனில், உங்கள் நிதி இலக்குகளுக்கு எந்த வகை ஃபண்ட் சிறந்தது என்பதைப் புரிந்துகொள்பவர் எனில், டைரக்ட் பிளானில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்தது. ஆன்லைனில் முதலீடு செய்வது, KYC நிறைவு செய்வது, SIP-க்காக ECS டெபிட் அமைப்பது போன்றவற்றை நீங்களே செய்யக்கூடியவர் எனில், நேரடியாக மியூச்சுவல் ஃபண்டிலேயே முதலீடு செய்யலாம். 

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்