மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து எனது பணத்தை எப்படி வித்டிரா செய்வது?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து என் பணத்தை எவ்வாறு வெளியே எடுப்பது? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸின் பெரும் ஆதாயங்களில் ஒன்று லிக்விடிட்டி (பணமாக்குதல்) – அதாவது, முதலீட்டாளர் தனது யூனிட்களை எளிதில் பணமாக்க இயலுதல்.

பணமாக்குதலை உறுதி செய்வதற்காக செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா (SEBI) அமைப்பால் வகுக்கப்பட்டுள்ள சிறந்த நெறிமுறைகள் கொண்டு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கட்டுப்படுத்தப்படுகிறது. பெருமளவிலான திட்டங்களைக் கொண்ட ஓப்பன் எண்டட் திட்டங்கள், பணமாக்குதலை ஒரு முக்கிய அம்சமாக வழங்குகின்றன. ஒரு சொத்தை எளிதாக ரொக்கமாக மாற்றிக்கொள்வது லிக்விடிட்டி அல்லது பணமாக்குதல் எனப்படுகிறது.

பணமாக்குதற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 3 வர்த்தக நாட்களுக்குள் முதலீட்டாளரின் வங்கிக் கணக்குக்கு பணம் பரிமாற்றப்படும்.

இருந்தாலும், இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். சில திட்டங்களில் இருந்து குறிப்பிட்ட காலகட்டத்தினுள் பணமெடுக்கும் போது, வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படலாம். இதுபோன்ற சூழல்களில், குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்பு, உதாரணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு பணமெடுக்கும் பட்சத்தில், சொத்து மதிப்பின் 0.5% அளவு வெளியேற்றக் கட்டணமாக விதிக்கப்படலாம். குறுகியகால முதலீட்டாளர்களைத் தடை செய்வதற்கு இதுபோன்ற வெளியேற்றக் கட்டணங்களை ஃபண்ட் மேனேஜர்கள் விதிப்பதுண்டு. இரண்டாவதாக, பணமாக்க இயலுவதற்கான குறைந்தபட்சத் தொகையை AMCகள் குறிப்பிட்டிருக்கலாம். முதலீட்டைச் செய்வதற்கு முன்பு, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக வாசிக்குமாறு முதலீட்டாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

349
347
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்