வட்டி விகித மாற்றங்கள் டெப்ட் ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் வட்டி விகிதத்தில் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்தும்?

டெப்ட்ஃபண்ட்களில் இருந்து பெறப்படும் ரிட்டர்னை, வட்டி வீத மாறுபாடுகள் எவ்வாறு பாதிக்கும்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

டெப்ட் ஃபண்ட்கள், கார்ப்பரேட் அல்லது அரசாங்க பாண்டுகள் மற்றும் பணச் சந்தை சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்யும். இந்த செக்யூரிட்டிகள், பொதுவாக வழக்கமான கால இடைவெளிகளில் ஒரு நிலையான வட்டியையும் (கூப்பன் விகிதம்) மற்றும் முதிர்வின் போது, முதலீடு செய்யப்பட்ட (அசல்) தொகையையும் வழங்கக்கூடிய வட்டி சார்ந்த பத்திரங்கள் ஆகும். வட்டி வீத மாற்றங்கள், இந்த செக்யூரிட்டிகளின் விலைகளை நேரடியாகப் பாதிக்கக்கூடியவை. பாண்டுகளின் விலையும், வட்டி வீதங்களும் எதிர்மாறான விகிதாச்சாரம் கொண்டவை.

தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட (முக மதிப்பு) விலையில் பாண்டு வழங்கப்படும்போது, பாண்டின் கூப்பன் விகிதம் நிர்ணயிக்கப்படும். கூப்பன் விகிதத்தை விட, வட்டி வீதங்கள் குறைந்தால், சந்தையில் நடப்பில் இருக்கக்கூடிய வட்டிவீதத்தை விட அதிக வட்டியை பாண்டு கொண்டிருக்கும். இதனால் இந்த பாண்டுகள் அதிகம் ஈர்க்கத்தக்க வகையில் இருக்கும். எனவே, இத்தகைய பாண்டுகளின் தேவை அதிகரித்து, அதன் விளைவாக அவற்றின் விலைகளும் அதிகரிக்கும். வட்டி வீதங்கள் அதிகரிக்கும் போது, இந்த பாண்டுகளின் மீதுள்ள ஈர்ப்பு குறைந்து, தேவை குறைவதன் காரணமாக அவற்றின் விலைகளும் குறையும்.

வட்டி வீதங்கள் அதிகரிக்கும் போது, டெப்ட் செக்யூரிட்டிகளின் விலைகள் குறைந்திடும். இது, தங்களின் போர்ட்ஃபோலியோவில் இந்த செக்யூரிட்டிகளை வைத்திருக்கும் டெப்ட்ஃபண்ட்களின் NAV குறைய வழிவகுக்கிறது. மறுபுறம், வட்டி வீதங்கள் குறையும் போது, டெப்ட் செக்யூரிட்டிகளின் விலைகள் அதிகரித்திடும். இதன் விளைவாக, நிலையான வருவாயளிக்கும் ஃபண்ட்களின் NAVகள் அதிகரிக்க வழிசெய்கிறது. இவ்வாறு, வட்டிவீதங்கள் குறையும் போது உங்களின் டெப்ட் ஃபண்ட் முதலீடுகளில் இருந்து நேர்மறையான ரிட்டர்னையும், வட்டிவீதங்கள் அதிகரிக்கும் போது எதிர்மறையான ரிட்டர்னையும் நீங்கள் பெறுவீர்கள்.

 

398
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்