பிற நாடுகளில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எவ்வளவு பிரபலமாக உள்ளது?

பிற நாடுகளில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எவ்வளவு பிரபலமாக உள்ளது? zoom-icon
கால்குலேட்டர்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

2015 டிசம்பர் 31, தேதியின்படி மொத்தம் 100,494 திட்டங்களில், ஓப்பன் எண்டட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் உலகளாவிய நிர்வாகத்தின் கீழான சொத்துக்கள் (AUM) 37.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது.

வளர்ந்த சந்தைகள், அதிகபட்ச AUM -ஐ கொண்டிருக்கும். அதேசமயத்தில், வளர்ந்து வரும் சந்தைகளின் மதிப்பு அதிகளவில் உயர்ந்து வருகிறது. அமெரிக்காவின் AUM சுமார் 17.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும், ஐரோப்பா 12.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும் கொண்டுள்ளது. ஆசிய பசுபிக் நாடுகள், 4.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும், அதில் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் ஆகியவை முறையே 1.52 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும், 1.26 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும் மற்றும் 1.33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும் கொண்டுள்ளது. பிரேசில் நாடு, சுமார் 743 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும்அதிகமாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சொத்துக்களைக் கொண்டுள்ளது. இந்தியா, 168 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சொத்துக்களைக் கொண்டுள்ளது. இது, இந்தியாவில், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் குறைந்தளவிலான முதலீடு செய்யப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.இருப்பினும் இந்தியாவில் இன்னும் அறியப்படாத அளவிற்கு வளமையான சாத்திய கூறுகள் இருப்பதை உணர்த்துகிறது.

வளர்ந்த நாடுகளில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மிகவும் பிரபலமாக இருப்பதையும், வேகமாக வளர்ந்துவரும் சந்தைகளில் அதிக ஏற்புமை உருவாகி வருவதையும் இந்தத் தரவுகள் நிரூபிக்கின்றன. GDP -ஐ அதிகரித்தல் மற்றும் வளர்ச்சியை நிர்வகிப்பதிலான செயல்திறனுள்ள ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளை நிறுவுதல் ஆகியவை வளர்ச்சிக்கு உதவிடும்.

(அனைத்துத் தரவுகளும், எண்களும் பின்வருவதிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன: International Investment Funds Association from Investment Company Institute Year Book 2016)

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்