நீங்கள் நீண்டகால முதலீட்டில் முதலீடு செய்துள்ளீர்கள், ஆனால் இடையிலேயே சந்தை இறங்கிவிட்டால், என்ன ஆகும்?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

SIP கள் மூலம் நீண்டகால முதலீடுகளைச் செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டாளர்கள், சந்தையின் மதிப்பு குறைவது குறித்து தொடர்ந்து கவலைப்படுவதுண்டு. பங்குச் சந்தையின் நேரம் மற்றும் ஏற்ற இறக்கங்கள் போன்ற சில மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அபாயங்களைச் சமாளிக்கும் வகையில் சிறப்பான முறையில் SIP கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

SIP கள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் வழக்கமான முறையில் முதலீடு செய்து ருபீ-காஸ்ட் அவரேஜிங் மூலம் உங்களால் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முடியும். இதில் NAV குறைவாக இருக்கும் போது நீங்கள் அதிக யூனிட்களையும், அதிகமாக இருக்கும் போது குறைவான யூனிட்களையும் வாங்குவீர்கள். NAV ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் போது நீண்டகாலத்தில் யூனிட்டின் விலை சராசரியாக்கப்படுவதை இது உறுதி செய்திடும். உதாரணத்திற்கு, நீங்கள் மாதம் ரூ. 1,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், NAV -யின் மதிப்பு ரூ. 10 ஆக இருக்கும் போது 100 யூனிட்களை உங்களால் வாங்க முடியும் மற்றும் NAV -யின் மதிப்பு ரூ. 5 ஆகக் குறைந்தால் உங்களால் 200 யூனிட்களை வாங்க முடியும். நீண்டகால அடிப்படையில் பார்க்கும் போது, சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில், ஒரு யூனிட்டின் சராசரி விலை குறைவாக இருக்கும். இதன்மூலம் ரிட்டர்ன்களின் மதிப்பு குறைவதைத் தடுக்க உதவிடும்.

நீங்கள் ஒட்டுமொத்தத் தொகையாக முதலீடு செய்தால், முழுக் காலகட்டத்துக்கும் யூனிட்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், NAV யின் மதிப்பு குறைந்தால் யூனிட்களின் மதிப்பும் குறைந்திடும். நீண்டகால அளவில் (கிட்டத்தட்ட் 7-8 வருட காலகட்டம்) ஒரு ஈக்விட்டி ஃபண்டில் ஓர் ஒட்டுமொத்தத் தொகையை நீங்கள் முதலீடு செய்திருந்தால், அவ்வப்போதான சந்தை ஏற்ற இறக்கத்தால் உங்கள் ரிட்டர்ன்களின் மதிப்பு பாதிக்கப்படாது. வழக்கமாக நீண்டகாலகட்டத்தில் அதன் மதிப்பு உயர்ந்திடும். இறுதியில் நீங்கள் தொடக்கத்தில் இருந்ததை விட அதிக NAV மதிப்பைப் பெறுவீர்கள்.

344
478
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்