முதலீட்டாளர் இறந்து போகும் நிலையில், அவரின் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகள் என்ன ஆகும்?

Video
கால்குலேட்டர்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ELSS  அல்லது FMP போன்ற குளோஸ்-எண்டட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தாலொழிய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களுக்கு வழக்கமாக முதிர்வு தேதி ஏதும் கிடையாது. SIP யில் முதலீடு செய்யப்பட்டிருந்தால், குறிப்பிட்ட காலகட்டத்துக்கு தொடர்ந்து முதலீட்டைச் செய்ய வேண்டும். SIP காலகட்டத்தின் போது அல்லது ஒரு குளோஸ்-எண்டட் திட்டத்தின் முதிர்வுக்கு முன்பு முதலீட்டாளர் இறந்து போகும் பட்சத்தில், நியமனதாரர் அல்லது கூட்டாக உரிமை கொண்டுள்ள சூழலில் சர்வைவர்கள் அல்லது வாரிசுதாரர்கள் முதலீடுகளை உரிமை கோருவதற்கு, வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் உள்ளன. இந்தச் செயல்முறைக்கு டிரான்ஸ்மிஷன் என்று பெயர். டிரான்ஸ்மிஷனுக்கு கோரிக்கை செய்யும் ஒருவருக்கு, உங்கள் மியூச்சுவல் முதலீடுகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அது கோரப்படாமலேயே போய்விடும்.

எனவே, பிற முதலீடுகளைப் போன்று மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகளுக்கும், ஒரு நியமனதாரரைச் சேர்ப்பதுடன், முதலீடு குறித்து நியமனதாரரிடம் தெரிவிக்கும் படியும் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் கூட்டுக் கணக்கை வைத்திருக்கும் பட்சத்தில், உங்கள் கணக்கில் சர்வைவர்களாக குறிப்பிடப்பட்டுள்ள நபர் டிரான்ஸ்மிஷனுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், உங்கள் ஃபோலியோவில் நியமனதாரர்கள் அல்லது உயிருடன் இருக்கும் கூட்டு கணக்குதாரர்கள் இல்லாத பட்சத்தில், தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்களின் சட்டபூர்வ வாரிசுகள் டிரான்ஸ்மிஷனுக்காக விண்ணப்பிக்க முடியும். டிரான்ஸ்மிஷனுக்காக விண்ணப்பிக்கும் நபர் KYC பதிவைச் செய்திருக்க வேண்டும்.

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்