நடுத்தரக் கால முதலீட்டுக்கு எந்த மியூச்சுவல் ஃபண்டை நான் தேர்வுசெய்ய வேண்டும்?

மிட்-டெர்ம் முதலீட்டிற்கு நான் எந்த மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

சேமிப்புகள் மற்றும் முதலீட்டுத் தீர்மானங்களில் 4-6 வருடங்கள் நடுத்தர காலஅளவாக கருதப்படுகிறது. எனவே, இங்கு மூலதனப் பெருக்கமே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். நீண்டகாலத்தில் நிதியைப் பெருக்குவதற்கு உகந்த ஈக்விட்டி ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த அளவு ஏற்ற இறக்கங்களைக் கொண்ட கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட்கள் மற்றும் ஹைபிரிட் ஃபண்ட்கள் போன்றவை மூலதனப் பெருக்கத்துக்கு உகந்தவை. கார்ப்பரேட் பாண்டுகள், 3-5 வருடங்கள் சராசரி முதிர்வைக் கொண்ட உயர்தரமான பாண்டுகளில் முதலீடு செய்யும். இதனால் வட்டிவீத மாற்றங்களால் மிகவும் குறைந்த அளவிலேயே இவை பாதிக்கப்படும். ஹைபிரிட் ஃபண்ட்கள், பெரும்பாலும் சிறிய அளவில் ஈக்விட்டியுடன், அதிக அளவில் டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்யும். இதனால், மூலதனப் பெருக்கத்துக்கான சாத்தியத்துடன் பாதுகாப்பான முதலீட்டுத் தேர்வை இவை வழங்குகின்றன.

நடுத்தர கால அளவிலான முதலீடுகளுக்கான ஃபண்ட்களை மதிப்பாய்வு செய்கின்ற அதேசமயத்தில், பண்டின் நீண்டகாலச் செயல்திறனுக்காக 3-5 வருடங்களுக்கு முன்பான அதன் செயல்திறனையும் ஆராய வேண்டும். சந்தைச் சுழற்சியின் அனைத்துக் கட்டங்களிலும் அது சீரான செயல்திறன் கொண்டதாக உள்ளதா என்று பார்க்கவும். சந்தை அதிகரிக்கும் போது, அதாவது, சந்தையின் போக்கு மேல்நோக்கி இருக்கும் போது, பெரும்பாலான ஃபண்ட்கள் சிறப்பாக செயல்படும். ஆனால், சந்தை இறங்கும் போதும் சிறந்த ரிட்டர்ன்களை வழங்கக்கூடிய ஃபண்ட் நீண்டகாலத்தில் சீரான ரிட்டர்னை வழங்கிடும். நீங்கள் 3-5 வருடங்களுக்கு முதலீடு செய்ய விரும்புவதால், இந்த சமயத்தில் சந்தை இறக்கத்துடன் இருந்தாலும், சீரான செயல்திறன் கொண்ட ஃபண்ட்களில் முதலீடு செய்வதன் மூலம் பலனடைவீர்கள். பல ஆண்டுகளாக நன்றாக செயலாற்றி வரும் நம்பகமான ஃபண்ட் ஹவுஸிலிருந்து ஒரு ஃபண்டை தேர்ந்தெடுக்கவும் அல்லது சரியான ஃபண்டை தேர்வுசெய்ய நிதி நிபுணரின் உதவியைப் பெறவும்.

345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்