முதலீட்டாளர்களை வகைபடுத்தக்கூடிய பல்வேறு வகையான ரிஸ்க் புரொஃபைல்கள் என்னென்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் ரிஸ்க்கை சார்ந்து பல்வேறு வகைப்பாடுகள் உள்ளதைப் போன்று, முதலீட்டாளர்களின் ரிஸ்க் சுயவிவரத்தின் அடிப்படையில் அவர்களை நாங்கள் வகைப்படுத்துகிறோம். இரண்டு காரணிகளின் அடிப்படையில் முதலீட்டாளர்களை துணிச்சலான (அக்ரெஸிவ்), மிதமான (மாடரேட்) மற்றும் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) ரிஸ்க் சுயவிவரங்களாக நாம் பிரிக்கலாம். ஒரு முதலீட்டாளரின் ரிஸ்க் சுயவிவரம் என்பது ரிஸ்க் எடுப்பதற்கான அவரின் இயலுமையையும் (ரிஸ்க் இயலுமை), ரிஸ்க்கை அனுமானித்து ஏற்பதற்கான விருப்பத்தையும் (ரிஸ்க் தவிர்ப்பு) சார்ந்து உள்ளது. ஒரு முதலீட்டாளருக்கு ரிஸ்க்கை எடுப்பதிலான விருப்பம் மற்றும் இயலுமை இரண்டும் குறைவாக இருந்தால், அவர் பழமைவாத முதலீட்டாளர் என்று அழைக்கப்படுகிறார். இவர் பெரும்பாலும் டெப்ட் ஃபண்ட்கள், வங்கி நிலையான வைப்பு (FD) போன்ற குறைந்த ரிஸ்க் கொண்ட தயாரிப்புகளில் முதலீடு செய்வர்.

ஒரு முதலீட்டாளருக்கு ரிஸ்க்கை ஏற்பதிலான இயலுமை மற்றும் விருப்பம் இரண்டும் அதிகமாக இருந்தால், அவர் துணிச்சலான முதலீட்டாளர் என்று அழைக்கப்படுகிறார். இவர் பெரும்பாலும் ஈக்கவிட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள், நேரடி ஈக்விட்டி போன்ற அதிக ரிஸ்க் கொண்ட தயாரிப்புகளில் முதலீடு செய்வர். இருந்தாலும், ரிஸ்க் எடுப்பதற்கு ஒரு முதலீட்டாளர் அதிக விருப்பம் கொண்டிருந்து ரிஸ்க்கை அனுமானிப்பதற்கான இயலுமை அவருக்கு குறைவாக இருந்தால், அல்லது ரிஸ்க் எடுப்பதற்கு குறைவான விருப்பமும் அதிக இயலுமையும் கொண்டிருந்தால், அந்த முதலீட்டாளர் மிதமான ரிஸ்க் கொண்ட தயாரிப்புகளில் முதலீடு செய்வதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அதிக ரிஸ்க் எடுத்து ஆபத்தில் உட்பட வேண்டாம் என்று கருதுகின்ற இந்த முதலீட்டாளர்கள் மிதமான முதலீட்டாளர்கள் என்று அழைக்கப்படுவர். இவர்கள் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம்.

முதலீடுகளின் ரிஸ்க்கானது முதலீட்டாளர்களின் ரிக்ஸ் இயலுமை மற்றும் ரிஸ்க் தவிர்ப்பின் வரம்பினுள் இருந்தால், அந்த முதலீட்டாளருக்குப் பொருத்தமான முதலீடுகளாக அவை கருதப்படுகின்றன.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்