கருத்து ரீதியான ஃபண்டுகள் என்றால் என்ன? இவை எப்படிச் செயல்படுகின்றன?

தீம் சார்ந்த ஃபண்ட்கள்: அப்படி என்றால் என்ன, அவை எப்படி செயல்படுகின்றன & எப்படி முதலீடு செய்வது? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

சுற்றுச்சூழலைப் பற்றி உங்களுக்கு அதிக அக்கறை உள்ளது என்று வைத்துக்கொள்வோம், அப்படியென்றால் சூழல் உணர்வுள்ள நடைமுறைகளைப் புறக்கணிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்வது உங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகாது. எனவே, இப்போது நீங்கள் ஒரு தீர்வைத் தேடுகிறீர்கள், அது உங்கள் தார்மீக மதிப்புகளுடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல், சாத்தியமான ரிட்டர்ன்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

சூழலுக்கு பாதகமில்லாத முதலீட்டு உலகிற்கு வரவேற்கிறோம்! குறிப்பிட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்கள் மட்டுமே உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்படுவதை ஒரு சிறப்பு வகை ஃபண்ட் உறுதி செய்கிறது. இந்த ஃபண்ட்கள் சூழல் பாதுகாப்பு, மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. ESG ஃபண்ட்களை அறிமுகப்படுத்துகிறோம், E என்பது சுற்றுச்சூழலையும், S என்பது சமூகத்தையும், G என்பது நிர்வாகத்தையும் குறிக்கிறது.

சுற்றுச்சூழல் பிரிவு தூய்மையான ஆற்றல், கழிவு குறைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களில் கவனம் செலுத்துகிறது. சமூகப் பிரிவு நியாயமான தொழிலாளர் நடைமுறைகள், மனித உரிமைகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களில் கவனம் செலுத்துகிறது. மேலும் நிர்வாகப் பிரிவு வெளிப்படையான தலைமைத்துவம், அறநெறிப்படி முடிவெடுத்தல், குழுமத்தின் பன்முகத்தன்மை ஆகியவற்றின் உறுதியான ஒத்திசைவை உறுதி செய்கிறது.

இங்கே, ESG ஃபண்ட்கள் ஒரு குறிப்பிட்ட தீமினைச் சார்ந்து செயல்படுகின்றன, சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் அறநெறிப்படியான நிர்வாகம் ஆகியவற்றை மிகவும் உயர்வாகக் கருதுகின்ற நிறுவனங்களை மையமாகக் கொண்டுள்ளது. எளிமையாகச் சொல்வதென்றால், இந்த ஃபண்ட்கள் இந்த முக்கியமான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களில் முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தீம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் என்றால் என்ன?

தீம் சார்ந்த ஃபண்ட்கள் என்பவை தூய்மையான ஆற்றல் அல்லது தொழில்நுட்பம் போன்ற குறிப்பிட்ட தீம்கள் அல்லது டிரெண்ட்களில் கவனம் செலுத்தும் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களாகும். இந்த ஃபண்ட்கள் குறிப்பிட்ட தீமுடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன, வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தி முதலீட்டாளர்களுக்கு ரிட்டர்ன்களை வழங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள் டிவிடென்ட் வருவாய் , PSU, MNC, ஆற்றல், பயன்பாட்டு நுகர்வு ஆகிய ஐந்து பெரிய தீம்களில் உள்ளன. உற்பத்தி, அளவு, பொருட்கள், ஏற்றுமதி, சேவைகள் மற்றும் போக்குவரத்து போன்ற பல சிறிய தீம்களில் ஒன்று அல்லது இரண்டு ஃபண்ட்கள் உள்ளன.

தீம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் முனைப்பாக நிர்வகிக்கப்படுபவை. உங்களைப் போன்ற முதலீட்டாளர்களுக்கு, அதிக வளர்ச்சி வாய்ப்புகளுக்கான சாத்தியக்கூறையும் அவர்களின் மதிப்புகள் அல்லது நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகின்ற தன்மையையும் கொண்டுள்ள, குறிப்பிட்ட தீம் சார்ந்த அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இருப்பினும், தீம் சார்ந்த ஃபண்டில் முதலீடு செய்வதன் அபாயங்கள் மற்றும் சாத்தியமான வெகுமதிகளை நீங்கள் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். இந்தத் தயாரிப்பு உங்களுக்கு ஏற்றதா என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

இந்த ஃபண்ட்கள் அதிக நிலையற்றதன்மை கொண்டிருக்கலாம், கான்சன்ட்ரேஷன் ரிஸ்க் அல்லது அவற்றின் செயல்திறனைப் பாதிக்கும் வெளிப்புறக் காரணிகளைப் பொறுத்து சரியாக செயல்படாமல் போகலாம்.

தீம் சார்ந்த முதலீடு எவ்வாறு செயல்படுகிறது?

தீம் சார்ந்த முதலீடு என்பது ஒரு குறிப்பிட்ட தீம் அல்லது டிரெண்டுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்வது. தீம் முதலீட்டின் பின்னணியில் உள்ள கருத்து என்னவென்றால், சில தொழில்கள் அல்லது டிரெண்டுகள் காலப்போக்கில் சிறப்பாகச் செயல்படும், மேலும் இந்தத் தீம்களுடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் அதிக ரிட்டர்னை அடைய முடியும்.

தீம் சார்ந்த ஃபண்ட்களில் முதலீடு செய்வதன் பலன்கள்

தீம் சார்ந்த ஃபண்ட்களில் முதலீடு செய்வதன் சில சாத்தியமான பலன்கள்:

  1. உயர்-வளர்ச்சித் துறைகளில் அனுபவம்: தீம் சார்ந்த ஃபண்ட்கள் குறிப்பிடத்தக்க எதிர்கால வளர்ச்சிக்குத் தயாராக இருக்கும் உயர்-வளர்ச்சித் துறைகளில் உங்களுக்கு அனுபவத்தை வழங்கும். எடுத்துக்காட்டாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்களில் முதலீடு செய்யும் தீம் சார்ந்த ஃபண்டானது தூய்மையான ஆற்றலுக்கான வளர்ந்து வரும் தேவையிலிருந்து பயனடையலாம்.
  2. டைவர்சிஃபிகேஷன்: தீம் சார்ந்த ஃபண்டில் முதலீடு செய்வதால் முதலீட்டாளர்களுக்கு டைவர்சிஃபிகேஷன் பலன்கள் கிடைக்கும்.. இந்த ஃபண்ட்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட தீம் தொடர்பான நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்கின்றன, இது ரிஸ்க்கை பரவலாக்கவும், ஒரே நிறுவனம் அல்லது துறையில் கவனம் செலுத்துவதைக் குறைக்கவும் உதவும்.
  3. தனிப்பட்ட கொள்கைகளுடன் ஒத்துப்போவது: தீம் சார்ந்த ஃபண்ட்கள் முதலீட்டாளரின் கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகும். எடுத்துக்காட்டாக, சமூகத் தாக்கத்தை மையமாகக் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் தீம் சார்ந்த ஃபண்டானது, சமூகப் பொறுப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் முதலீட்டாளருக்கு ஒத்துப்போவதாக இருக்கலாம்.
  4. நீண்ட கால ரிட்டர்ன்களுக்கான சாத்தியம்: ஒரு குறிப்பிட்ட தொழில்துறை அல்லது வளர்ச்சியடைந்து வரும் துறையில் அனுபவம் கொண்ட தீம் சார்ந்த ஃபண்ட்கள், அந்தத் துறை நீண்ட காலத்திற்கு சிறப்பாகச் செயல்பட்டால், விரிவான மார்க்கெட்டையும் தாண்டி சிறப்பாகச் செயல்படலாம். இருப்பினும், முதலீட்டாளர்கள் தங்கள் ரிஸ்க் தயார்நிலையைக் கருத்தில் கொண்டு முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்க வேண்டும். இருப்பினும், அவர்கள் முதலீடு செய்யும் தீம் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாகச் செயல்பட்டால், தீம் சார்ந்த ஃபண்டுகளும் குறைவாகச் செயல்படக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் எதிர்பார்க்கும் வருவாயை தீம் சார்ந்த ஃபண்டுகள் எப்போதுமே தரும் என்று கூற முடியாது.

தீம் சார்ந்த ஃபண்டுகளுடன் தொடர்புடைய ரிஸ்க்குகள்

தீம் சார்ந்த ஃபண்டுகள் அனுபவமுள்ள முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகளை வழங்கினாலும், அவை அனைவருக்கும் பொருந்தாது. தீம் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில ரிஸ்க்குகள்:

1. கான்சன்ட்ரேஷன் ரிஸ்க்

தீம் சார்ந்த ஃபண்ட்கள் ஒரு குறிப்பிட்ட துறை அல்லது தீமில் முதலீடு செய்கின்றன, அதாவது அவை கான்சன்ட்ரேஷன் ரிஸ்க்கால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. தீம் செயல்திறன் குறைவாக இருந்தால் அல்லது ஒழுங்குமுறை சார்ந்த மாற்றங்களை எதிர்கொண்டால், அது ஃபண்ட் ரிட்டர்னில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

2. நிலையற்ற தன்மை

டைவர்சிஃபை செய்யப்பட ஃபண்டுகளைவிட தீம் சார்ந்த ஃபண்ட்கள் ஒரு குறிப்பிட்ட துறை/தீம் மீது குவிக்கப்படுவதால் அதிக நிலையற்றதாக இருக்கும். இந்த ஏற்ற இறக்கம் ரிட்டர்னில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுத்து, குறைந்த ரிஸ்க் டாலரன்ஸைக் கொண்ட முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமற்றதாக ஆக்குகிறது.

3. லிக்விடிட்டி ரிஸ்க்

சில தீம் சார்ந்த ஃபண்ட்கள் ஸ்மால்-கேப் அல்லது மிட்-கேப் ஸ்டாக்குகளில் முதலீடு செய்கின்றன, அவை போதுமான லிக்விடிட்டி இல்லாமல் இருக்கலாம். இது மார்க்கெட் ஏற்ற இறக்கம் அல்லது சாதகமற்ற மார்க்கெட் நிலைமைகளின்போது முதலீட்டிலிருந்து வெளியேறுவதைச் சிக்கலாக்கும்.

4. செயல்திறன் ரிஸ்க்

தீம் சார்ந்த ஃபண்ட்கள் அதிக ரிட்டர்னை வழங்க முடியும், ஆனால் அவை பரந்த மார்க்கெட் அல்லது டைவர்சிஃபைடு ஃபண்டுகளைவிட சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தீம் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு, துறை/தீம் மற்றும் அடிப்படை நிறுவனங்களின் செயல்திறன் பற்றிய முழுமையான புரிதல் தேவை.

தகவலறிந்த முதலீட்டு முடிவை எடுப்பதற்கு, ஃபண்ட் மற்றும் திட்டத்தின் ஆவணங்களை கவனமாகப் படிப்பது முக்கியம், குறிப்பாக தீம் சார்ந்த ஃபண்ட்களுக்கு. இந்த ஆவணங்களில் உள்ள ரிஸ்க்-ஓ-மீட்டர் மற்ற ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது திட்டத்தின் ரிஸ்க் அளவைக்காட்டுகிறது. கூடுதலாக, தொடர்புடைய வரையறைகளுக்கு ஒப்பிட்டு ஃபண்டின் ரிஸ்க்கை மதிப்பிடுவது அல்லது அதே பிரிவில் உள்ள பிற ஃபண்டுகளின் சராசரி ரிஸ்க்கை மதிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்.

இறுதிக் கருத்துகள்

தீம் சார்ந்த ஃபண்ட்கள் முதலீட்டாளர்களுக்கு உயர் வளர்ச்சித் துறைகள், டைவர்சிஃபிகேஷன் நன்மைகள், தனிப்பட்ட மதிப்புகளுடன் ஒத்துப்போவது, முனைப்பான மேலாண்மை மற்றும் சிறந்த செயல்திறனுக்கான சாத்தியக்கூறுகளை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இருப்பினும், தீம் சார்ந்த ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன், ரிஸ்க்குகள் மற்றும் சாத்தியமான வெகுமதிகளை நீங்கள் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். பிற முதலீடுகளைப் போலவே, உங்களின் சரியான விடாமுயற்சியுடன், முதலீட்டு உத்தி, இதுவரையான செயல்திறன் மற்றும் கட்டணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் உங்கள் முதலீட்டு இலக்குகள் மற்றும் ரிஸ்க் டாலரன்ஸின் அடிப்படையில் தகவலறிந்த முடிவை எடுக்க வேண்டும்.

பொறுப்புதுறப்பு:

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

284
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்