CAGR அல்லது வருடாந்திர ரிட்டர்ன் என்றால் என்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படும் வருடாந்தர வளர்ச்சி விகிதமே (CAGR) பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவீடாக உள்ளது. ஏனெனில் இது தான் ஒரு முதலீட்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் ரிட்டர்ன் எவ்வளவு என்பதை சரியாகக் கணக்கிட்டுக் கூறுகிறது. அப்சல்யூட் ரிட்டர்ன் கணக்கீடோ, முதலீட்டுக்கு எவ்வளவு காலம் ஆனது என்பதைக் கணக்கில் கொள்ளாமல், ஆரம்ப மதிப்புக்கும் கடைசி மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து ரிட்டர்னைக் கணக்கிடுகிறது. 

CAGR கணக்கீடானது, ஆரம்பத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை, இறுதியில் அதன் மதிப்பு மற்றும் அதற்கு ஆன கால அளவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, ஒரு முதலீட்டில் பல்வேறு அசட் வகைகளில் ரிட்டர்ன்ஸை ஒப்பிட உதவுகிறது என்பதால் அதுவே சிறந்தது. 5 வருடங்களுக்கு முன்பு ரூ.1000 முதலீடு செய்யப்பட்டு, இப்போது அதன் மதிப்பு ரூ.1800 எனில், அப்சல்யூட் முறையில் வளர்ச்சி விகிதம் 80% ஆகும். CAGR முறையோ ஒவ்வொரு வருடமும் அந்த முதலீடு பெறும் ரிட்டர்னைக் கணக்கிடுகிறது. அதன் CAGR விகிதம் 12.5% இருக்கும். இதை வருடத்திற்கு 12.5% ரிட்டர்ன் என உறுதியளிக்கும் வங்கியின் FD-உடன் ஒப்பிட வேண்டும் எனில், CAGR மதிப்பீட்டைக் கொண்டு எளிதில் ஒப்பிடலாம். 

அதேபோல், உங்கள் முதலீடு பெறும் ரிட்டர்னை, பணவீக்கத்தைக் கழித்துவிட்டுக் கணக்கிட விரும்பினால், பணவீக்கம் வருடத்திற்கு சுமார் 4% என்று வைத்துக்கொண்டால், பணவீக்கத்தைக் கழித்த பிறகும் CAGR உங்களுக்கு 8.5% கிடைக்கும். ஒரு வருடத்தை விட அதிக கால அளவுக்கு ரிட்டர்ன்களை ஒப்பிடும்போது CAGR மதிப்பே மிகப் பயனுள்ளது. சில வருடங்களில் அந்த முதலீடானது 12.5%க்குக் குறைவான ரிட்டர்னைக் கொடுத்திருக்கலாம், சில வருடங்களில் அதற்கு அதிகமாகக் கொடுத்திருக்கலாம். ஆனால் சராசரியாகப் பார்க்கும்போது அது மொத்தம் 5 வருட கால அளவில் அதன் மதிப்பு வருடத்திற்கு 12.5% அதிகரித்து வந்துள்ளது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்