ரிட்டயர்மென்ட்டிற்காக நிதித் திட்டமிடலைச் செய்யத் தொடங்குவதற்கான சரியான வயது என்ன?

ரிட்டயர்மென்ட்டிற்காக நிதித் திட்டமிடலைச் செய்யத் தொடங்குவதற்கான சரியான வயது என்ன?
கால்குலேட்டர்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

உங்கள் ரிட்டயர்மென்ட்டிற்கான திட்டமிடலையும் முதலீட்டையும் செய்வதற்கு இன்றே சிறந்த நேரம்! உங்களின் நடப்பு வயது, வாழ்க்கையில் உங்கள் நிதி நிலை என்னவாக இருந்தாலும் இன்றே தொடங்கிடுங்கள்! ஓர் இலக்கை அமைத்து எவ்வளவுக்கு எவ்வளவு முன்கூட்டியே முதலீடு செய்யத் துவாங்குகிறீர்களோ, அவ்வளவு மடங்கு அதிகமாக உங்கள் பணம் பெருகிடும். உங்களின் நடப்பு வயது 30 என்றும், அடுத்த 30 வருடங்களுக்கு நீங்கள் மாதாமாதம் ரூ.2000 தொகையை SIP-இல் முதலீடு செய்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். கூட்டுவட்டியின் நன்மை காரணமாக உங்கள் பணம் நீண்டகாலத்திற்குப் பெருகிடும். வருடாந்திர வட்டி வீதம் 12% என்று வைத்துக் கொண்டால், வருடாந்திர முதலீடாக ரூ.7.2 இலட்சம் தொகையை 30 ஆண்டுகளுக்குச் செய்யும்போது, உங்களின் ரிட்டயர்மென்ட் காலத்தில் ரூ.70 இலட்சம் தொகை சேர்ந்திருக்கும்.

ஒருவேளை ஒரு பத்தாண்டுகள் கழித்து உங்கள் SIP முதலீட்டைத் தொடங்கி இருந்தால், வருடாந்திர முதலீடாக ரூ.4.8 இலட்சம் தொகையை 20 வருடங்களுக்குச் செய்யும்போது, முடிவில் நீங்கள் 20 இலட்சம் தொகை மட்டுமே பெறுவீர்கள். 10 ஆண்டுகள் தாமதப்படுத்துவதால், ரிட்டயர்மென்ட் சமயத்தில் சேர்ந்திருகின்ற தொகை மூன்றில் ஒரு பங்காக குறைந்திருப்பதை நீங்கள் காணலாம். துரதிர்ஷ்டவசமாக, கூட்டுவட்டியின் நன்மையைப் பெரும்பாலானோர் நீண்டகால நோக்கில் வைத்துச் சிந்திப்பதில்லை. மேலும் தாமதமாகத் தொடங்குவதன் காரணமாக ஒரு பெரும் ரிட்டயர்மென்ட் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பைத் தவறவிடுகின்றனர். ஒருசில வருடங்களுக்கு முதலீடுகளைத் தாமதப்படுத்துவது நேர இழப்பை ஏற்படுத்திடும். மேலும் இதனால் பணம் பெருகுவதற்கான வாய்ப்பும் இழக்கப்படும்.

வேலைக்குச் சேர்ந்த உடனேயே அனைவருமே தங்களின் நிதி இலக்குகளைத் திட்டமிடத் தொடங்கி, அந்த இலக்குகளை நோக்கி முதலீடுகளைச் செய்ய வேண்டும். முடிவில், நீண்டகாலத்திற்கு சீரான முதலீடுகளைச் செய்பவர் பந்தயத்தில் வெற்றியடைவார்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்