மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய எப்போது தொடங்கலாம்?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒரு சீனப் பழமொழி ஒன்று உள்ளது, “ஒரு மரத்தை வளர்க்கச் சிறந்த நேரம் 20 வருடங்களுக்கு முன்பு ஆகும். இரண்டாவது சிறந்த நேரம் இப்போது” என்று

முதலீடு செய்ய பணம் இல்லாத சமயம் தவிர, ஒருவர் தனது முதலீட்டை தாமதிக்க வேறு எந்தக் காரணமும் இல்லை. இந்த முதலீட்டில், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது எப்போதுமே சிறந்தது.

முதலீட்டைச் செய்யத் தொடங்குவதற்கு குறைந்தபட்ச வயது என்று எதுவும் கிடையாது. ஒருவர் சம்பாதிக்கவும், சேமிக்கவும் தொடங்கிய உடனேயே, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யத் தொடங்கலாம். குழந்தைகள் தங்களின் பிறந்தநாட்கள் அல்லது விழாக்களின் போது பரிசாகப் பெறக்கூடிய பணத்தில் இருந்து கூட, அவர்கள் தங்களின் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கணக்குகளைத் தொடங்க முடியும். அதேபோன்று, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.

வெவ்வேறு நோக்கங்களுக்குப் பொருத்தமான வெவ்வேறு திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் உள்ளன. சில திட்டங்கள் நீண்ட காலகட்டத்தில் வளர்ச்சியடையக் கூடியவையாக இருக்கும், அதேசமயத்தில் வழக்கமான முதலீட்டுடன் பாதுகாப்பையும் விரும்புபவர்களுக்கு சில திட்டங்கள் குறுகியகாலத்தில் வளர்ச்சியைக் கொடுப்பதாகவும் உள்ளன.

வாழ்க்கையில் எந்த நிலையில் இருப்பவர்களுக்கும், எந்தவிதமான தேவைகளைக் கொண்டவர்களுக்கும், ஒவ்வொருவருக்குமான தீர்வுகளை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கொண்டுள்ளது.

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்