நீண்டகால முதலீட்டுக்கு எந்த மியூச்சுவல் ஃபண்டை நான் தேர்வுசெய்ய வேண்டும்?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நீண்டகால முதலீடுகள் என்பவை, கல்லூரிப் படிப்பு, வீடு, ஓய்வுகாலம் போன்ற எதிர்காலத்திற்கு உதவுவதை இலக்காகக் கொண்டவை. நீண்டகால இலக்குகள் 10 வருடத்துக்கும் மேற்பட்ட காலகட்டத்தைக் கொண்டிருக்கும். ஈக்விட்டி சார்ந்த திட்டங்கள் (65% க்கும் மேற்பட்ட ஈக்விட்டி ஒதுக்கீடு கொண்டவை), நீண்டகால முதலீட்டுத் தேர்வுக்கான சிறந்த ஒன்றாக இருக்கும். ஹைப்ரிட் மற்றும் டெப்ட் ஃபண்ட்களுடன் ஒப்பிடும் போது, குறுகியகாலத்தில் அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தாலும் ஈக்விட்டிகள் அதிக இலாபத்தைத் தரும் சாத்தியம் கொண்டவை. ஒரு நல்ல பல்வகைப்பட்ட ஈக்விட்டி ஃபண்ட்கள் நீண்டகாலத்தில் நிலையான வளர்ச்சியை வழங்கக்கூடியவை. 

அதிக அபாயம் சரிசெய்யப்பட்ட ரிட்டர்ன்கள் (ஷார்ப் விகிதம்) கொண்ட ஃபண்ட்களில் முதலீடு செய்திடுங்கள். அதாவது, ஒரே நிலையிலான அபாயத்தில் அதிக ரிட்டர்ன்களை கொடுக்கக் கூடிய ஃபண்ட்களில் முதலீடு செய்திடுங்கள். கூட்டு வட்டித் திறனின் காரணமாக ஃபண்டின் ரிட்டர்ன்களை செலவு விகிதங்கள் நீண்டகாலத்தில் பாதிக்கக் கூடும். குறைந்த செலவு விகிதம் கொண்ட ஒரு ஃபண்டை தேர்ந்தெடுக்கவும். அதாவது நீண்டகாலத்தில் ஃபண்டின் ரிட்டர்னை அதிகரிக்கக்கூடிய வகையில் அதிக எண்ணிக்கையிலான ஃபண்ட்கள், முதலீடுகளுக்காக கிடைக்கின்றன. நல்ல முடிவுகளை வழங்குகிறதா என்பதைப் பார்க்க ஃபண்ட் மேனேஜரின் கடந்தகால செயல்பாட்டைப் பார்க்கவும். அவர் நிர்வகித்த ஃபண்ட்களின் வகைகளைப் பார்த்து, அவை தொடர்ச்சியாக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதா என்று பாருங்கள். நீண்டகால முதலீடுகளுக்கான அதிக பீட்டா நிலையைக் கொண்ட ஃபண்ட்களையும் நீங்கள் பார்க்கலாம். ஏனென்றால் அவை சந்தையை விட அதிக இலாபம்/நஷ்டத்தை அடைய நேர்ந்தாலும், வழக்கமாக நீண்டகாலத்தில் அவை அதிகரித்திடும். எனவே, உங்கள் ஃபண்ட் அதிக பீட்டாவை கொண்டிருந்தால், நீண்ட காலத்தில் சந்தையை விட அதிக இலாபத்தைப் பெற்றிடும் என்று அர்த்தம்.

345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்