நேரடியாகப் பங்குகள் அல்லது பாண்டுகளில் இல்லாமல் ஏன் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாக முதலீடு செய்ய வேண்டும்?

நேரடியாக பங்குகள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யாமல், எதனால் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் முதலீடு செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஆம், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் அல்லாது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலமாக முதலீட்டைச் செய்ய வேண்டும். இதில் என்ன வித்தியாசம் உள்ளது?

நீங்கள் எப்போதாவது பங்குகளை மற்றும் பாண்டுகளை வாங்கவும் விற்கவும் செய்யலாம். ஆனால் உங்கள் முதலீடுகளை நிர்வகிப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸின் உதவியை நாடுவது என்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் முதலீடு செய்யும்போது, தொழில் வல்லுனர்களின் உதவியுடன் நீங்கள் பங்குகள், பாண்டுகள் அல்லது பிற முதலீடுகளில் மறைமுக முதலீட்டைச் செய்வீர்கள். அந்தப் பணிகளை நீங்களே செய்வதை விட, ஒரு சிறுகட்டணத்தைக் கொடுத்து, ஒரு நிதி மேலாண்மை நிறுவனத்திடம் இருந்து சேவைகளைப் பெறுவீர்கள். இந்த சேவைகளில் வெறும் ஆராய்ச்சி மட்டுமல்லாது, பல்வேறு முதலீடுகளின் தேர்வு மற்றும் வாங்கல்-விற்பனை போன்றவையும், முதலீட்டின் கணக்கியல் மற்றும் நிர்வாகம் போன்ற செயல்பாடுகளும் உள்ளடங்கும். இவற்றை ஒரு தகுதி வாய்ந்த ஃபண்ட் மேனேஜர் மேற்கொள்வார்.

346
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்