ஒரு ETF-இல் நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

ETF-இல் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஸ்டாக்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று உங்களுக்கு ஆர்வம் உள்ளது, ஆனால் உங்கள் போர்ட்ஃபோலியோவிற்கு ஏற்ற சரியான ஸ்டாக்குகள் எவை என ஆராய்ச்சி செய்து கண்டறிய நேரமும் திறனும் இல்லை என்றால், ETFகளில் முதலீடு செய்வதே உங்களுக்கு மிகச்சிறந்த வழியாகும்! தனித்தனி ஸ்டாக்குகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும், பணமாக்கும் திறனை இழக்காமல் ETFகளில் முதலீடு செய்வது, ஸ்டாக் மார்க்கெட்டில் பங்கேற்பதை எளிதாக்குகிறது. நேரடியாக ஸ்டாக்குகளில் முதலீடு செய்வதுடன் ஒப்பிடுகையில், இவை குறைந்த செலவில் அதிக டைவர்சிஃபிகேஷன் நன்மைகளை அளிக்கின்றன. 

ETF அல்லது எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட் என்பது ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு வகை மியூச்சுவல் ஃபண்டாகும். இவற்றை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் செய்யும் பிற ஸ்டாக்குகள் போலவே நிகழ் நேரத்தில் வர்த்தகம் செய்ய முடியும். ETFகள் ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட்களே என்பதால், அவற்றின் போர்ட்ஃபோலியோவானது மார்கெட் இன்டெக்ஸ்களின் தொகுப்பைப் பிரதிபலிக்கின்ற செக்யூரிட்டிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. ஆகவே, குறிப்பிட்ட சில ஸ்டாக்குகளைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆராய்ச்சி செய்வதற்கு நேரத்தையும் ஆற்றலையும் செலவிடாமலே, ஸ்டாக் மார்கெட் இன்டெக்ஸின் அங்கமாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாக்குகளில் உங்கள் முதலீடு செல்லும்.  குறைந்த எக்ஸ்பென்ஸ் ரேஷியோ காரணமாக, ETFகள் பிற வகை ஸ்டாக் முதலீடுகள் மட்டுமின்றி, பிற வகை மியூச்சுவல் ஃபண்ட்களைக் காட்டிலும் கூட மிக சிக்கனமானவை.
 
 ETFகள் பாண்ட் மார்கெட்களிலும் கிடைக்கின்றன. இதனால் மற்ற டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட் போலவே இவற்றின் மூலம் நீங்கள் டெப்ட் அசட் வகைகளிலும் அனுபவம் பெற முடிகிறது. உங்கள் முதலீட்டுத் தேவைகளுக்கு ஏற, பரந்துபட்ட நிறுவன பாண்ட்கள் அல்லது ஸ்டாக்குகளில் நீங்கள் குறைந்த செலவில் முதலீடு செய்யலாம், ஸ்டாக் அல்லது பாண்ட் போலவே அவற்றை வர்த்தகமும் செய்யலாம்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்