ETF-ஐ எப்படித் தேர்வுசெய்வது?

ETFஐ எவ்வாறு தேர்வுசெய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மற்ற முதலீடுகளைப் போலவே, ETF-ஐத் தேர்வு செய்வதும் உங்களுக்குத் தேவையான சொத்து ஒதுக்கீடு, நிதி இலக்கு, ரிஸ்க் விருப்பம் மற்றும் முதலீட்டுக் காலஅளவுகளைப் பொறுத்தது. உங்கள் போர்ட்ஃபோலியோவில் ETFஐச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் எந்த வகையான சொத்து ஒதுக்கீட்டை அடைய விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து ETFஇன் தேர்வு இருக்கும். ஏனெனில் பங்குகள், பாண்டுகள், ரியல் எஸ்டேட், கமாடிட்டி போன்ற பல்வேறு வகையான சொத்து வகைகளுக்கு ஏற்ப ETFகள் கிடைக்கின்றன. ETFக்கான சொத்து வகுப்பை முதலில் முடிவு செய்யுங்கள்.

நீங்கள் என்ன வகையான பல்வகைப்படுத்தலை அடைய விரும்புகிறீர்கள் மற்றும் என்ன இன்டெக்ஸைப் பின்தொடர விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். ஒரு பரந்த மார்க்கெட் இன்டெக்ஸைப் பின்தொடர்கின்ற ETF, குறைந்த ரிஸ்க்குடன் அதிகபட்ச பல்வகைப்படுத்தலை அடைய ஏற்றது. நீங்கள் ரிஸ்க்கை எடுக்க விரும்பினாலோ, அல்லது குறிப்பிட்ட சந்தைப் பிரிவுகள், துறைகள் அல்லது நாடுகள் சார்ந்தவற்றில் முதலீடு செய்ய விரும்பினாலோ, ஒரு குறிப்பிட்ட ETF-ஐத் தேர்வுசெய்யுங்கள். 

ETF-இன் போர்ட்ஃபோலியோவைப் பாருங்கள், அது என்னென்னவற்றில் முதலீடு செய்கின்றன என்று பாருங்கள். நீங்கள் பின்தோடர விரும்பும் சொத்து வகை மற்றும் சந்தைப் பிரிவில் குறைந்த டிராக்கிங் எரருடன் கூடிய ETFகளைத் தேர்வு செய்யுங்கள். குறைவாக வர்த்தகம் செய்யப்படும் ETF-களுக்கு ஏலக் கேட்பில் பரந்த விலை மாறுபாடுகள் (bid-ask spread) இருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். மேலும் உங்கள் வர்த்தகச் செலவுகளை இது அதிகரிக்கும். இதனால் உங்கள் ETF-இன் ரிட்டர்ன்கள் குறைந்திடும். குறுகிய சந்தைப் பிரிவுகளைப் பின்தொடர்கின்ற அல்லது குறைந்த அளவிலான சொத்துக்களைக் கொண்ட (AUM) ETFகள், குறைந்த ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும் மற்றும் அவற்றின் அடிப்படை NAVஐச் சாராத விலையில் வர்த்தகம் செய்ய முனைந்திடும். தங்களின் NAVகளுக்கு நெருக்கமாக வர்த்தகம் செய்யும் ETFகளைத் தேடுங்கள்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்